மேலும் அறிய

"பெண்களின் உரிமைகளை பறிப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் கற்பியுங்கள்": திருக்கடையூரில் எம்.பி. கனிமொழி அனல் பறக்கும் பிரச்சாரம்!

பெண்களின் உரிமைகளைப் பறிப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் கற்பியுங்கள் என திருக்கடையூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்.

திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி திருக்கடையூர் கடைவீதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய பாஜக அரசையும், அதற்குத் துணை போகும் அதிமுகவையும் கடுமையாகச் சாடினார்.

தொகுதி மறுவரையறை மசோதா: பாஜகவின் முதல் தோல்வி

ஏராளமான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கனிமொழி எம்.பி., நாடாளுமன்றத்தில் பாஜக அரசு சந்தித்த பின்னடைவுகளைப் பட்டியலிட்டார். "மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதாவை நாம் ஒன்றிணைந்து தோற்கடித்துள்ளோம். இது நாடாளுமன்றத்தில் பாஜக சந்தித்த முதல் தோல்வி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்று பொய் சொல்லி, தமிழ்நாட்டிற்கு எதிரான அம்சங்களை அதில் புகுத்தப் பார்த்தார்கள். ஆனால், நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் அதனை முறியடித்துள்ளோம்," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் மௌனம் ஏன்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவர்,

துரோகமும் மௌனமும்:

"தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு இழைக்கும் துரோகங்களைக் கண்டு எடப்பாடி பழனிசாமி வாய் திறக்க மாட்டார். கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நிற்பார். ஏன் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தீர்கள் என்று அவரிடம் கேளுங்கள்." "மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கியதா? தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராட அதிமுகவிற்குத் துணிவில்லை."

100 நாள் வேலைத் திட்டம்: "கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த பிரதமர் மோடி சட்டம் கொண்டு வருகிறார். இதைப் பற்றியும் அதிமுக பேசுவதில்லை."

நிதிப் பகிர்வில் வஞ்சனை: ஹிந்தி திணிப்புப் பின்னணி

தமிழகத்தின் நிதி உரிமைகள் பறிக்கப்படுவதைக் குறித்துப் பேசுகையில், "நமது பிள்ளைகள் ஹிந்தி படிக்கவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக, கல்விக்கான 3,600 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தமிழர்களின் கல்வியின் மீதான தாக்குதல்," என்று சாடினார்.

மகளிர் மசோதா குறித்து விளக்குகையில்

"33 சதவீத இட ஒதுக்கீட்டை இப்போதே கொடுங்கள் என்றுதான் திமுக சொல்கிறது. ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் தருவோம் என்று சொல்வது ஏமாற்று வேலை. இன்றைய பசிக்கு இருப்பதைப் பகிர்ந்து கொடுங்கள் என்று கேட்டால், புதிதாகப் பானை வைத்து சமைத்துத் தருகிறோம் என்று சொல்வது யாருக்குப் பயன்? எங்களுக்கு அந்தப் பொய் வாக்குறுதிகள் வேண்டாம்."

வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை

தமிழகத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய அரசு முடக்கி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், மக்களிடம் பின்வரும் கேள்விகளை எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்:

1.தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏன் அனுமதி தரவில்லை?

2. தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?

3. ரயில்வே திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களை ஏன் கிடப்பில் போட்டுள்ளீர்கள்?

பெண்மையைப் போற்றுவோம் - உரிமைகளைக் காப்போம்

இறுதியாக வாக்காளர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்த கனிமொழி:

"பெண்களின் பெயரால் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், முதலமைச்சர் தளபதியின் கரத்தைப் பலப்படுத்தவும், பூம்புகார் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எம்.எல்.ஏ. நிவேதா முருகனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்," என்று முழங்கினார்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருக்கடையூர் பகுதி முழுவதும் திமுக தொண்டர்களின் உற்சாகக் கோஷங்களால் அதிர்ந்தது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget