மேலும் அறிய

28 கிலோவில் இருந்து 39 கி-விற்கு எடை கூடிய மாணவன்.. PTR- சொன்ன மேஜிக், பிரச்சாரத்தில் ஸ்வாரசியம் !

நம் தொகுதியிலேயே முதல் முறை அந்த உணவு திட்டம் நம் தொகுதியில் ஆரம்பித்தது. - அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் பிரச்சாரத்தில் பெருமிதம்.

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினால் பயன்பெற்ற மாணவன் விஸ்வா மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நேரில் நன்றியுடன் வாழ்த்து தெரிவித்தார்.

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மாணவன்

மதுரை முத்துப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் விஸ்வா என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த மாணவனின் உடல் நலனில் தனித்த கவனம் செலுத்தி தற்போது முழு ஆரோக்கியம் பெற்றவராக அந்த மாணவர் திகழ்கிறார். நேற்று மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உடன் இணைந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த மாணவன் விஸ்வா நன்றி உணர்வோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அமைச்சர் பேச்சு

அப்போது பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...," முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கும்போது நான் நிதி அமைச்சராக இருந்து, அதில் ஒரு பங்கு வகித்தவன் என்ற காரணத்துக்காக முதலமைச்சர் அவர்கள் அந்த திட்ட துவக்கத்தை என் தொகுதியிலேயே நடத்தி கொண்டார். நம் தொகுதியிலேயே முதல் முறை அந்த உணவு திட்டம் நம் தொகுதியில் ஆரம்பித்தது. அன்றைக்கே நம் தொகுதியில் இருக்கிற அனைத்து பணிகளுக்கும் அந்த உணவு திட்டம் ஆரம்பித்தது.

மாணவனை சந்தித்த அமைச்சர்

அந்த சமயத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் நம்ம விஷ்வாவ அன்னைக்கு சந்திச்சேன். அப்ப விஷ்வாவ கேட்டேன் ஏன்யா ரொம்ப ஒள்ளியா இருக்க? எதுவும் சரியா சாப்பிட மாட்டியயா? என்று கேட்டன். அப்ப சொல்றான் "இல்ல கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கு மஞ்சக்காமலை வந்துச்சு" என்றான். கொரோனா காலத்தில பல குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு குறை வந்திருக்கு. எனவே விஸ்வாவுடைய உதாரணத்தை எடுத்து வச்சு அனைத்து பள்ளிகளிலும் மெடிக்கல் கேம்ப் நடத்தி எங்கெங்க ஊட்ட சக்தி கம்மியா இருக்கோ அதெல்லாம் ஆய்வு செய்து அங்கே ஊட்டு சக்தியை விரிவாக்கனும் அதிகரித்தோம்.

நல்லா சாப்பிட சைக்கிள்

விஸ்வா ஒரு ஸ்பெஷல் கேஸ். வெயிட் மட்டும் ஏறவே மாட்டேன்னு இருந்துச்சு. அதனால இவனுக்கு தினம் எங்க கழக தோழர்கள் மூலம் பழம், பிஸ்கட், வைட்டமின் டேப்லெட் எல்லாம் அனுச்சிவிட்டு வெயிட் ஏறுமான்னு பார்க்கிறதுக்கு ஒரு எடை ஸ்கேல் ஒன்னு வச்சுகொடுத்தோம். வாரத்துக்கு ஒரு முறை இவனுக்கு வெயிட் எடுத்து பாத்துட்டே இருந்தா, இந்த உயரத்துக்குதான் இருப்பான். இவ்வளவு ஒள்ளியா இருப்பான் ஏறவே இல்லை. அப்ப என்ன பண்றதுன்னே தெரியல. மூணு மாசம் என்னதான் சாப்பிட கொடுத்தாலும் வெயிட்டும் ஏறல உயரமும் ஏறல. அப்படியே அப்புறமா கடைசியா என்ன சொன்னோம் நீ ஒழுங்கா சாப்பிட்டு நீ வளர்ந்தனா என்ன கொடுக்கணும்? கொடுத்தாதான் ஒழுங்கா சாப்பிடுறான்னு கண்டுபிடிச்சு இவனுக்கு ஒரு ஊக்கம் கொடுக்கறதுக்கு நீ ஒழுங்கா சாப்பிட்டு வெயிட் அதிகரிச்சு எல்லாம் நல்லா இருந்தா அவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கறோம்னு சொல்லி ஒரு ஆண்டு ஆச்சு. ஒரு ஆண்டு வரைக்கும் இவனுக்கு பழம், வைட்டமின், பிஸ்கட், டேட்ஸ், நியூட்ரிஷன் எல்லாம் அனுப்புச்சு, ஒரு ஆண்டு கழிச்சு எத்தனை கிலோக்கு வந்த நீ? என்ன வெயிட்டுக்கு வந்த? எத்தனை கிலோ எடைக்கு வந்த?

மாணவன் "39 கிலோக்கு வந்துள்ளேன.  ஆரம்பத்துல 28 கிலோ தான் இருந்தேன்.

அமைச்சர் "அதற்கு பிறகு என்ன வாங்கி கொடுத்தேன்?"

மாணவன் "சைக்கிள்.

"ஒரு தவறான விளைவு இல்ல, குறைவான ஒரு விளைவு. ஒரு இடத்தில் கண்டறிந்தால் அதை திருத்துவது அஞ்சு நிமிஷத்திலயோ 10 நிமிஷத்திலயோ ஒரு மாசத்துலயோ விஸ்வாவோட கேஸ்ல கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சுதான் வளர ஆரம்பிச்சான். ஒழுங்கான வெயிட் வந்தான். எனக்கு இருக்கறதுலயே பெரிய மகிழ்ச்சி இன்னைக்கு பாருங்க விஸ்வா நீ உயரமா நான் உயரமாடா யாரு உயரம் ஜாஸ்தி? சரி அடுத்த தடவை நான் பாக்குறதுக்குள்ள இவன் பத்தாம் கிளாஸ் 11ஆம் கிளாஸ் போறதுக்கு உள்ள உறுதியா இவன் என்னோட உயரமா இருப்பான். அவன் சைக்கிள் எப்படி ஓட்டி இருக்குன்னு பாத்துட்டு பாரு கை எல்லாம் நல்லா இருக்காடா பெரிய கைய தூக்கு அந்த அளவுக்கு சிறப்பா இருக்கான் விஸ்வா. " என்று மகிழ்ந்தார். 

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget