மேலும் அறிய

'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !

தமிழ்நாட்டில் இந்த ‘சங்கிகளுக்கு’ இடமில்லை, இடமில்லை, இடமில்லை என்பதை திருப்பரங்குன்றத்திலிருந்து தொடங்கி நாம் நிரூபிப்போம். - கனிமொழி பிரச்சாரம்.

முதலமைச்சரை பார்த்து, ‘உங்கள் சகோதரி சங்கியா என்று? டெல்லிக்கு சென்று காங்கிரஸுடன் கூட்டணி பேசினால் சங்கி ஆக முடியாது. ஆனால், பாஜகவின் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை முன்வைத்து பேசும்போதுதான் ஒருவர் ‘சங்கி’ என்று அழைக்கப்படுவார்: திருப்பரங்குன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பிரச்சாரம்.
 
கனிமொழி பிரச்சாரம்
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வீரகனூர் ஊராட்சியில், மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், திமுக வேட்பாளருமான கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிரசாரம் செய்தார். கூட்டணி இயக்கங்களின் கொடிகளை பார்க்கும்போது, கிருத்திகா தங்கபாண்டியனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதே என்ற எள்ளளவும் சந்தேகம் இல்லை. கிருத்திகா தங்கபாண்டியன் இந்தத் தொகுதி மக்களுக்கு புதியவர் அல்ல; தொடர்ந்து இந்தப் பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக்கூடிய வேட்பாளரையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார்.
 
சுயமரியாதைக்கு முக்கியத்துவம் தருகிறோம்
 
அதே நேரத்தில், தன் காலில் சுயமாக நிற்கக்கூடியவும், தலைநிமிர்ந்து வாழக்கூடியவும் ஒரு பெண் வேட்பாளர். பல சுயஉதவி குழுக்களை உருவாக்கி, பெண்களின் வாழ்க்கையில் வளம் ஏற்படுத்தப் பாடுபட்டு வரும் ஒருவர் தான் கிருத்திகா தங்கபாண்டியன். அவருக்கு உங்கள் வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றம் என்றாலே, சில காலத்திற்கு முன்னால் பாஜக, அதிமுக ஆகியவை இங்கு உருவாக்க முயன்ற கலவரத்தை நாம் மறந்து விட முடியாது. காலங்காலமாக ஒற்றுமையாக, சகோதர சகோதரிகளாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வரும் மக்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் மத நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மதத்தின் பெயரில் வெறுப்பும் காழ்ப்புணர்வும் எந்தக் காலத்திலும் இல்லாமல், வளர்ச்சியே தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு முக்கியமாக உள்ளது. எங்கள் வீட்டு பிள்ளைகள் படிக்க வேண்டும்; அவர்களின் எதிர்காலம் நல்லதாக இருக்க வேண்டும். நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம்; நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறோம்; சுயமரியாதைக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் மாநிலம் தமிழ்நாடு.
 
மிகப்பெரிய பாடம்
 
ஆனால், பாஜக இந்த நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரங்களை உருவாக்கி, அதன் வழியாக ஆட்சிக்கு வரலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கக்கூடியவர்கள். அவர்கள் திருப்பரங்குன்றத்திலும் அதே விளையாட்டை விளையாடிப் பார்க்கலாம் என நினைத்தார்கள். ஆனால் இங்கு உள்ள மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டினர்,  ‘இது தமிழ்நாடு; உங்கள் கனவுகளுக்கு இங்கு இடமில்லை’ என்று. நாங்க ஒற்றுமையாகத் தமிழர்களாக வாழக்கூடியவர்கள் என்று சரியான பாடத்தை சொல்லித் தந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய ஒரு பாடத்தை அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சொல்லித்தர காத்திருக்கக்கூடியவர்கள் தான் நம்முடைய தமிழ்நாட்டு மக்கள். 
 
யார் சங்கி
 
எதிர் அணியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டு இருக்கார். என்ன பாத்து சங்கின்னு சொல்றீங்களே, எப்படி நீங்க என்ன போய்ச் சங்கி ன்னு சொல்ல முடியும்? நீங்கக் கூடப் பிஜேபி யோட கூட்டணி வச்சிருந்தீங்க. அதனால் நான் மட்டும் எப்படி அந்த குற்றத்திற்கு ஆளாவேன் என்று கேட்கிறார். ஆனால், எதிரணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். ‘என்னை பார்த்து “சங்கி” என்று சொல்கிறீர்கள்; எப்படி என்னை அப்படி சொல்ல முடியும்? நீங்கள் கூட பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். அதனால் நான் மட்டும் எப்படி அந்த குற்றத்திற்கு ஆளாவேன் என்று கேட்கிறார்.  
 
CAA’ கொண்டு வந்தபோது எடப்பாடி பழனிசாமி
 
நான் ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் முன்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது; தலைவர் கலைஞர் அவர்கள் வாஜ்பாய் அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர். ஆனால், ‘குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம்’ (Common Minimum Programme) என்ற ஒன்றை உருவாக்கி, இஸ்லாமிய மக்களுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக நிபந்தனை விதித்தனர். அந்தக் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து, அதையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டனர். அது பாஜகவின் தனிப்பட்ட தேர்தல் அறிக்கை அல்ல; கூட்டணியின் ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கையாக வெளியே வந்தது. அந்தத் தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கு இருந்த தனி அந்தஸ்து பறிக்கப்படும் என்று சொல்லப்படவில்லை. ‘Uniform Civil Code’ (ஒரே குடிமைச் சட்டம்) நிறைவேற்றுவோம் என்று கூறக் கூடாது என்பதில் வலியுறுத்தி அதைத் தடுத்து நிறுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இவ்வாறு, இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த நடவடிக்கையும் அனுமதிக்காமல் கூட்டணியை நடத்தி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால் இன்று, ‘CAA’ கொண்டு வந்தபோது எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? அதை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? பேசவில்லை.
 
சங்கிகளுக்கு’ இடமில்லை
 
பாஜக எதைச் சொல்கிறோதோ, எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் சொல்லுவதற்கு முன்பே தலையாட்டுகிறீர்கள். அதனால், நீங்கள் முழுமையாக ‘சங்கி’யாக மாறிவிட்டீர்கள். தேர்தல் முடிந்தவுடன் தயாராக இருங்கள், நிச்சயமாக உங்களை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்புவார்கள். ஏனெனில், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்தக் கட்சிகள் எங்கே சென்றன, அந்தத் தலைவர்களின் நிலை என்ன ஆனது என்பதையும் நாம் அறிவோம். அதனால், உங்களுக்கு ஒரு மாநிலத்தில் ஆளுநர் பணி காத்து கொண்டிருக்கிறது. அதோடு, இன்னொரு கேள்வியையும் அவர் எழுப்புகிறார் — முதலமைச்சரை பார்த்து, ‘உங்கள் சகோதரியை காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு அனுப்புகிறீர்களே; அவர்கள் சங்கி ஆகிறார்களா?’ என்று. டெல்லிக்கு சென்றாலே யாரும் சங்கி ஆகிவிட மாட்டார்கள். டெல்லிக்கு சென்று காங்கிரஸுடன் கூட்டணி பேசினால் சங்கி ஆக முடியாது. ஆனால், பாஜகவின் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை முன்வைத்து பேசும்போதுதான் ஒருவர் ‘சங்கி’ என்று அழைக்கப்படுவார். அதனால், இப்போது வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி, ‘இனிமேல் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது’ என்று கூறினார். ஆனால் தேர்தல் வந்தவுடன் மீண்டும் கூட்டணி வைத்து, அவர்களுடன் கைகோர்த்து மேடையில் நிற்கும்போது தான் உங்கள் ‘சங்கித்தனம்’ முழுமையாக வெளிப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் இந்த ‘சங்கிகளுக்கு’ இடமில்லை, இடமில்லை, இடமில்லை என்பதை திருப்பரங்குன்றத்திலிருந்து தொடங்கி நாம் நிரூபிப்போம்.
 
 

தலைப்பு செய்திகள்

CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget