Annamalai Memes: அரசியலை விட்டு விலகுகிறாரா அண்ணாமலை? - சமூக வலைதளங்களில் தெறிக்கும் மீம்ஸ்..!
Tamil Nadu Lok Sabha Elections Result 2024: கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
நாடுமுழுவதும் இன்று காலை 8 மணிமுதல் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான, தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், பாஜக கிட்டத்தட்ட 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் 230 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 39 இடங்களிலும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளனர்.
இந்தநிலையில், கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதையடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அண்ணாமலையை வறுத்தெடுத்து வருகின்றனர்.
#ResultsOnABP | கோவையில் மட்டன் பிரியாணி வழங்கிய திமுகவினர்#Coimbatore #Annamalai #ElectionsResults #loksabha #ElectionsResultsOnABP pic.twitter.com/4duzb6PSlt
— ABP Nadu (@abpnadu) June 4, 2024
அண்ணாமலையை நெட்டிசன்கள் கிண்டலடிக்க காரணம் என்ன..?
பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என மேலிடம் அறிவித்திருந்தது. அதன்பிறகு, வேட்பாளராக களமிறங்கி தீவிர வாக்கு வேட்டையில் வேங்கையாக செயல்பட்டார். பாஜக எதிர்பார்த்ததைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெறும், திமுக டெபாசிட் கூட பெறாது என செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். தொடர்ந்து, ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் நேரடியாக பேசிய அண்ணாமலை, அதிக சதவீதத்தில் வெற்றிபெறுவேன் இது சவால். அப்படி இல்லையென்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன். தொடர்ந்து, சில இடங்களில் குறி வைத்துள்ளோம். இது மிஸ் ஆகாது. தேர்தலுக்கு பின் தென்மாவட்டங்களில் திராவிட கட்சி எம்.பி.க்களே இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் பேசினார்.
Mutton Biriyani Ready...😂🐐#Coimbatore pic.twitter.com/BAFctrVjE8
— ᴊ ᴇ ʀ ᴏ ᴍ ᴇ (@JudeJerome07) June 4, 2024
இந்த பேச்சுக்குதான் சவுட்டுமேனிக்கு அடி விழுந்துட்டு இருக்கு... 😂#Coimbatore pic.twitter.com/3TV42y0dZh
— ᴊ ᴇ ʀ ᴏ ᴍ ᴇ (@JudeJerome07) June 4, 2024
மாற்றம் வரும்.. தமிழகத்துக்கு இல்லை.. தமிழக பாஜக தலைமைக்கு ! 🔥
— Political Trends™ (@PoliticalTrnds) June 4, 2024
என்ன என்ன சொன்னான் பாருங்க..😂#ElectionsResults #Coimbatore pic.twitter.com/NfpriyKzRI
#Coimbatore pic.twitter.com/Ib2eSRoU2E
— 𝙋𝙧𝙖𝙫𝙚𝙚𝙣 𝙏𝙬𝙚𝙚𝙥𝙨 (@Praveen_tweeps) June 4, 2024
#Coimbatore 🤭🤭 pic.twitter.com/UFNPmYmKA5
— Thangaraj (@vtr9724) June 4, 2024
🤡🔥#Annamalai #Coimbatore #ElectionsResults #Indiapic.twitter.com/giPf2XYTUS
— Pink Man (@Jessi_PinkMan18) June 4, 2024
இப்படி ஓவர் காண்பினெட்டில் பேசிய அண்ணாமலையை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஓரம் கட்டிவிட்டார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அண்ணாமலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.