மேலும் அறிய

Telangana Election Results 2024: பரிதாப நிலையில் சந்திரசேகர் ராவ்! தெலங்கானா முழுவதும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி படுதோல்வி?

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பாரதி ராஷ்ட்ரிய சமிதி கட்சி பின்தங்கி உள்ளது. இதனால், அவர்களின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலமாக தெலங்கானா மாநிலம் உள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானது முதலே அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தது பாரத் ராஷ்ட்ரிய சமிதி. தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகர் ராவ்.

17 தொகுதியிலும் தோல்வி:

கடந்த சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்தார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தனது கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றியது முதலே சந்திரசேகர் ராவிற்கு பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த முறை மீண்டு வரலாம் என்று கருதிய சந்திரசேகர் ராவிற்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதாவது, தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட சந்திரசேகர் ராவின் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி முன்னணியில் இல்லை. அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பா.ஜ.க. 7 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஒரு தொகுதியில் ஓவைசி முன்னணியில் உள்ளார்.

பரிதாப நிலையில் சந்திரசேகர் ராவ்:

தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லாமல் இருப்பதால், இந்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் படுதோல்வி அடைந்திருப்பது பி.ஆர்.எஸ். கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் மகபுதாபாத், தம்மம் ஆகிய 2 தொகுதியில் மட்டுமே இரண்டாவது இடத்தில் பி.ஆர்.எஸ். கட்சி உள்ளது. மற்ற இடத்தில் எல்லாம் 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

மேலும் படிக்க: Election Results 2024 LIVE: சந்திரபாபு நாயுடுவுடன் பேசிய சரத்பவார்?: பாஜக கூட்டணியை தூக்குகிறதா இந்திய கூட்டணி!

மேலும் படிக்க: Coimbatore Election Results 2024: பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பின்னடைவு! தி.மு.க. தொடந்து முன்னிலை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தைUdhayanidhi vs DMK Seniors| சீனியர்களுக்கு கல்தா!ஆட்டத்தை தொடங்கும் உதயநிதி! ஸ்டாலின் க்ரீன் சிக்னல்?Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு
நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு
Embed widget