மேலும் அறிய

அவதூறுகளை நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை; அதிமுக வேட்பளாருக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை

தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் திருவிழா 2024

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பாராளுமன்ற  தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும், அ.தி.மு.க., சார்பில் டாக்டர் டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். பிற வேட்பாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் இருவரும் வெற்றியை நோக்கி தேர்தல் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் சரவணனுக்கு எதிராக சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
சு.வெங்கடேசன்
 
அதில், 'மதுரைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்குச் சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலிப் பொருளாக மாற்றி விடுகின்றன. மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் ஏதும் இல்லாததால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் - களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள். அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல். தற்போது சரவணன் அவர்கள் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் "வெங்கடேசன் எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் விட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா ? என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும், விரைவான தலையீடுகளினாலும் கோவிட் களத்தில் மதுரை மக்களைக் காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான் அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அவர்கள் . 
 
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில் 16 கோடியே 96 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஒட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம். எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான். ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் அவர்கள் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். அரசு இராசாசி மருத்துவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம். உண்மை இப்படி இருக்க, 5 கோடி மட்டுமே செலவழித்துள்ளோம். மீதப்பணத்தை செலவழிக்க வில்லை எனக்கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் இல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல ; ஆனால் தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Breaking News LIVE:மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்
Congress MP:
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
Kalki 2898 AD: ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா பிரபாஸின் கல்கி? ரசிகர்கள் ஆர்வம்
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
Embed widget