(Source: ECI/ABP News/ABP Majha)
Lok sabha election 2024 : தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது... எகிறியது எதிர்பார்ப்பு
தைலாபுரம் தோட்டத்தில் பாமக கூட்டணி குறித்து இறுதி கட்ட உயர் மட்ட குழு ஆலோசனை தொடங்கியது.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதுஇ நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி பாமக அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாமகவிற்கு 6 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் வட தமிழ்நாட்டிலும், தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடே மிகவும் எதிர்ப்பார்த்த மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டி மக்களவை தேர்தல் வரும் ஏபரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி கட்டம் எட்டியுள்ளது. கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக உடன் எந்த கட்சி கூட்டணியில் இடம்பெறும் என்பது குறித்து உறுதியாகமல் இருந்தது. இதற்கிடையில் பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் பாமக, பாஜக உடன் கூட்டணி அமைக்கும் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி இதறகான உடன்படிக்கை கையெழுத்தாகும் என தகவல்கள் கூறுகின்றன. பாமகவிற்கு 6 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. பாமகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க அதிமுகவிற்கு விருப்பம் இல்லையென்றால் கூட கூட்டணி கருத்தில் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.