மேலும் அறிய

பிரதமர் மோடி 10 ஆண்டுக்கு முன்பு கொடுத்த கேரண்டி என்ன ஆனது? - முத்தரசன் கேள்வி

2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னது, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் என்கின்ற மோடியின் கேரண்டி என்ன ஆனது?

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியதாவது, ”இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு மாநில முதல்வர்களை சிறையில் அடைத்துவிட்டு தேர்தல் நடத்தும் பாசிச ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் இறுதி காலகட்டம் எப்படி இருந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி எண்ணிப் பார்க்க வேண்டும்.

மோடி கேரண்டி என்ன ஆனது?

2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னது, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் என்கின்ற மோடியின் கேரண்டி என்ன ஆனது? 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கேட்டால் கச்சத்தீவு பிரச்சனையை பேசுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஒரு கடிதமாவது எழுதியது உண்டா? 10 ஆண்டுகள் என்ன அமைச்சர்  சீதாராமனுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தாரா?  ஹிந்தி மொழி திணிப்பு தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டங்களை கொச்சைப்படுத்தி அண்ணாமலை விமர்சித்திருப்பது மிகவும் கீழ்த்தரமான செயல். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.


பிரதமர் மோடி 10 ஆண்டுக்கு முன்பு கொடுத்த கேரண்டி என்ன ஆனது? -  முத்தரசன் கேள்வி

பாஜக முயற்சி நிறைவேறாது

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சிறப்பான திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடியோ மக்களை திசை திருப்பும் வகையில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வாஜ்பாய் மற்றும் சாவர்க்கர் இரண்டு பேரை தவிர சுதந்திரப் போராட்டத்தில் அந்த கட்சியினர் யாரும் ஈடுபடவில்லை. ஈடுபட்ட இருவரும் கைதான இரண்டே நாட்களில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்த வரலாற்றை அவர்கள் படிக்க வேண்டும். அதிமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காது என அண்ணாமலை பேசி வருவது அவரது அறியாமையை காட்டுகிறது. இதே போல் இந்தியாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருக்காது என மோடி பேசுவதும் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒருபோதும் நிறைவேறாது. 19ஆம் தேதி நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget