மணப்பாறையில் தேர்தல் பணிகளை பார்வையிட்ட கரூர் ஆட்சியர்
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்.
கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 1,36,691 பேர், பெண் வாக்காளர்கள் 1,41,486 பேர் மற்றும் இதர வாக்காளர்கள் உள்ளிட்ட மொத்தம் 2,78,379 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,588 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொறுத்தும் பணி நடைபெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பணிபுரியவுள்ள 2301 அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறவுள்ள மணப்பாறை லட்சுமி மெட்ரிக்பள்ளி மற்றும் சௌமா மொட்ரிக் பள்ளியில் பயிற்சி பெற வரும் அலுவலர்கள் தபால் வாக்குகள் அளிக்கும் வகையில் சிறப்பு மையம் அமைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு குடிநீர், மின்விசிறி மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் ஆகிய இரண்டு நாட்களிலும் விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்குற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 382 போர் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 495 என 877 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் அஞ்சல் வாக்குகளை பாதுகாப்புடன் பெற்று உரிய பாதுகாப்பு அறையில் வைத்து வாக்கு எண்ணிக்கை வரை பாதுகாத்திட வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியின்போது மணப்பாறை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வம், வட்டாட்சியர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.