மேலும் அறிய
Advertisement
வேட்பாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்ய வேண்டியது என்ன ? - வெளியானது முக்கிய அறிவிப்பு
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுார் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து ஸ்ரீபெரும்புதுார் தொகுதி வேட்பாளர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் இதர தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் 05-ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கல்பட்டு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), மற்றும் சிறப்பு வட்டாட்சியர் (தேர்தல்) ஆகியோரும் பங்கேற்றனர்.
72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்
- ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும் வேட்பாளரது முதன்மை முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும் வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கோரும்பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்டஅளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக, ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும் மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.
- அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு கீழ்கண்டுள்ள வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
- வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது
- கோவில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
- மொத்தமாக Bulk SMS அனுப்புவதோ மற்றும் Voice Message அனுப்புவதோ கூடாது
48 மணிநேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்
- அனைத்து வேட்பாளர்களும் 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் (17.04.2024 06.00 PM வரை)
- 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.
- வெளியூரிலிருந்து பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய பாராளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடந்து இப்பாராளுமன்ற தொகுதியில் இருக்க அனுமதியில்லை.
- ஐந்து நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதியில்லை.
- மூன்று முறை வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்தான விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் 17.04.2024 க்குள் (அளிக்கப்பட்ட காலக்கெடு 08.04.2024 முதல் 17.042024 ) அளித்து இவ்வலுவலகத்தில் தாக்கல் செய்திட வேணடும்
24 மணிநேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்
- 24 மணி நேரம் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின், MCMC குழுவினரிடம் 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்.
- உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் அனுமதி இல்லை.
தேர்தல் நாளன்று பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்
- தேர்தல் நாளன்று. வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு.
- ஓட்டுநர் உள்பட ஐந்து பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை.
- தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்டப்பட வேண்டும்.
- மேற்கண்டுள்ள அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி செல்ல கூடாது.
- வாக்காளரை வாக்களித்திட வாக்காளரின் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ, வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்து செல்லவாகன வசதி ஏற்படுத்தி தரக்கூடாது.
- வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி மற்றும் Mega phones பயபன்படுக்கக்கூடாது.
- ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவர் தேர்தல்நாளன்று பிற்பகல் 0300 மணிக்கு முகவர்கள் மாற்றம் செய்ய அனுமதியில்லை.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion