திருவண்ணாமலையில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 100% முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிரீடங்களை அணிந்து காத்தடிகளை பறக்கவிட்டு பங்கேற்றனர்.
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற நாளை 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 100% அவர்களுடைய வாக்குகளை பதிவு செய்யும் விதமாகவும், அவர்களை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்று புறங்களில் உள்ளவர்களை வாக்களிக்க வலியுறுத்தியும், வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு எந்த இடத்தில் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, நான் வாக்கு செலுத்தியது யாருக்கு என்று தெரிந்து கொள்ளும் விதமாக வி வி பேட் இந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
முதல் வாக்காளர்களின் தலையில் கிரீடம்
அப்போது முதல் முறையாக வாக்களிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்றும், அதில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும், மேலும் தாங்கள் வாக்களித்தது யாருக்கு என்று தெரிந்து கொள்ளும் விதமாக வைக்கப்பட்டுள்ள விவிபி பேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து முதல் தலைமுறை வாக்காளர்கள் அவர்களது நெற்றியில் கிரீடத்தை அணிந்து பெருமையுடன் நாங்களும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் பங்கு பெறுவோம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரின் இணைந்து குழு புகைப்படத்தினை எடுத்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக காத்தாடியை பறக்கவிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.