அமரன் கானா பாட்ட கேட்டாலே கிறுகிறுக்கும்... பரப்புரையில் பாடலுக்கு வைப் ஆன நடிகர் கார்த்திக்
தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது. நடிகர் கார்த்திக் தேனியில் பேட்டி.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதிரித்து திரைப்பட நடிகரும் நமது மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவர் கார்த்திக் பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக் கூறுகையில், "இன்றைக்கு இந்திய குடிமகனாக தேர்தல் பரப்புரைக்கு வந்திருக்கிறேன். தேர்தல் நேரங்களில் மட்டும் வந்து செல்பவன் நானல்ல. எங்களது கட்சி, கொரோனா, மழை வெள்ளம் போன்ற பாதிப்புகளின்போது வெளியில் தெரியாமல் உதவி வருகிறோம். தொடர்ந்து எங்கள் கட்சி மூலம் மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பது தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் பார்க்க முடிகிறது. இந்தியாவின் பிரதமராக இருப்பவரை தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என நாம் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் எதற்காக தமிழகம் வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக வசை பாடுவதை தவிர்த்து தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் நமது எதிர்ப்பைத் தெரிவித்தால் போதுமானது" என்று கூறினார்.
LSG Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடர் - லக்னோவின் வெற்றிப்பயணம் தொடருமா? டெல்லியுடன் இன்று மோதல்
இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி தொகுதி வேட்பாளர் நாராயணசாமி உள்பட தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அதிமுக வேட்பாளருக்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசிய கார்த்திக்கிடம். அமரன் திரைப்படத்தின் பாடலை பாடுமாறு அங்கிருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் கேட்டனர்.
அப்போது நடிகர் கார்த்திக் தாய்மார்களுக்காக இந்த பாடல் என்று கூறி, அமரன் திரைப்படத்தில் வரும் ”வெத்தல போட்ட சோக்குல” எனும் பாடலை பாடியும் இரட்டை இலைக்கு வாக்குகள் பறக்கும் என்று பாடல் பாடினார். நடிகர் கார்த்திக் அவருடைய திரைப்படத்தின் பாடலை பாடி காட்ட அங்கிருந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகமடைந்தனர். அனைவரிடமும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அங்கிருந்து சென்றார்.