மேலும் அறிய

Local body election | தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 6,06,485 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

2022 -ல் நடைபெறவுள்ள நகர்புற தேர்தலின் கணக்கெடுக்கின் படி தஞ்சையில் 292737 ஆண் வாக்காளர்களும், 313701 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 57 என மொத்தம் 606485 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்புற தேர்தலின் கணக்கெடுக்கின் படி தஞ்சை மாவட்டத்தில் 750 வாக்கு சாவடிகளில் 292737 ஆண் வாக்காளர்களும், 313701 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 57 என மொத்தம் 606485 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு  கடந்த ஜனவரி  மாதம்  28ஆம் தேதி வேட்பு மனு தொடங்கி பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறுகின்றது.

தமிழகத்திலேயே  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தான் தஞ்சை, கும்பகோணம் என இரண்டு மாநகராட்சிகள் உள்ளன. இதில் தஞ்சை மாநகராட்சியில் 95261 ஆண் வாக்காளர்களும், 104230 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 15 என மொத்தம் 199506 வாக்காளர்களுக்கு 196 வாக்குசாவடிகள், கும்பகோணம் மாநகராட்சியில் 62720 ஆண் வாக்காளர்களும், 65904 பெண் வாக்காளர்களும், மற்ற மூன்று என மொத்தம் 128627 வாக்காளர்களுக்கு 139 வாக்கு சாவடி, பட்டுக்கோட்டை நகராட்சியில் 30119 ஆண் வாக்காளர்களும், 32340 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 18 என மொத்தம் 62477 வாக்காளர்களுக்கு 66 வாக்கு சாவடி, அதிராம்பட்டினம் நகராட்சியில் 13382 ஆண் வாக்காளர்களும், 13863 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 27245 வாக்காளர்களுக்கு 33 வாக்கு சாவடி, 20 பேரூராட்சிகளான ஆடுதுறை, அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதுார், வல்லம், வேப்பத்துார் ஆகிய 20 பேரூராட்சிகளில் 316 வாக்கு சாவடிகள் என தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 750 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் தற்போது வரை 83 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Local body election | தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 6,06,485 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

1.11.2021 கணக்கெடுப்பி் படி தஞ்சை மாவட்டத்தில் 306113 ஆண் வாக்காளர்களும், 327570 பெண் வாக்காளர்களும், மற்ற 57 என கூடுதல்  633740 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்புற தேர்தலின் கணக்கெடுக்கின் படி தஞ்சை மாவட்டத்தில் 750 வாக்கு சாவடிகளில் 292737 ஆண் வாக்காளர்களும், 313701 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 57 என மொத்தம் 606485 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தஞ்சை மாநகராட்சிக்கு, தஞ்சை ராஜா சரபோஜி அரசு கல்லுாரியிலும், கும்பகோணம் மாநகராட்சிக்கு, கும்பகோணம் கரூப்பூர் சாலையிலுள்ள  அரசு தன்னாட்சி கலை கல்லுாரியிலும், பட்டுக்கோட்டை நகராட்சிக்கு அரசு ஆடவர் மேல்நிலைப்பள்ளியிலும், அதிராம்பட்டிணம் நகராட்சிக்கு காதர்மொய்தீன் கலை கல்லுாரியிலும், வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை ஆகிய பேரூராட்சிகளுக்கு, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லுாரி, தரை தளத்திலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதுார், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்துார், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பகுதிகள், கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியிலும், பேராவூரணி, பெருமகளூர் பகுதிக்கு, பேராவூரணி அரசு ஆடவர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது.  நடைபெறவுள்ள நகர்புற தேர்தலுக்கு பேலட் யூனிட் 3154,கண்ட்ரோல் யூனிட் 1834 ஈவிஎம் மிஷின் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


Local body election | தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 6,06,485 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

இந்நிலையில், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2022 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாவது சீரற்றமையமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மருத்துவர் வைத்திநாதன் ஆகியோர்  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில்  2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாவது சீரற்றமையமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.  வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படும் 905 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும், 905 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் சீரற்றமயமாக்கல் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget