மேலும் அறிய

Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு

’’கேட்கிறவன் கேனையாக இருந்தால் அதற்கு பின் வருவதை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் பொய் சொல்வதில் தான் மு.க ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர்’’

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்  இணை- ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். ’’தேர்தல் ஆணையம் நகர்புற தேர்தலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் துவங்கப்பட்டு விட்டன. மதுரை நகர் புற  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். உள்ளாட்சி அமைப்பு மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு.

பெரும்பான்மையான இடம் கிடைக்கும் போது மேயர் வாய்ப்பு கிடைக்கும். மதுரை மாநகராட்சி மூலமாக, குடிநீர், சாலை,  குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கு. இதை நிறைவேற்ற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் வாழ்ந்தவர்கள். மதுரையின் என்று  சொன்னாலே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அண்ணா தி.மு.கவின் கோட்டையாக தான் இருந்து வருகிறது. 1978 ஆம் ஆண்டும் மதுரையை எம்.ஜி.ஆர் மாநகராட்சியாக மாற்றினார். 44 ஆண்டுகாலத்தில் அ.தி.மு.க காலத்தில் பல நன்மைகள் செய்து உள்ளோம். தி.மு.க எதும் செய்யவில்லை.

Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு

தி.மு.க வந்துவிட்டால் கொள்ளையடிக்க , இருப்பதை எல்லாம் எடுத்துச் சென்று விடுவார்கள். தி.மு.க கொள்ளையடிக்க ஆட்சிக்கு வந்துள்ளனர். ஸ்டாலின் நேற்றைய தினம் ஓர் சவால் விட்டார். 'உங்களுடைய  சவாலை ஏற்கிறோம்.'நீட் தேர்வு  யார் ஆட்சி காலத்தில்  நச்சுவிதைக்கப்பட்டத்து. பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் வருகிறோம் மக்கள் தீர்மானிக்கட்டும். எது உண்மையென தி.மு.க ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து என கூறினீர்கள். 9 மாதம் கடந்த நிலையில் ரத்து செய்யப்பட வில்லை. பொய் பேசுவதற்கான நோபல் பரிசு மு.க ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை?. நீட் தேர்வை தொடர்ந்து வலியுறுத்தி ரத்து செய்வதுதான் ரகசியம். பிளேட் மாற்றும் வேலையை தி.மு.க செய்து வருகிறது.

Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு

ரகசியத்தை கண்டுபிடித்து வெளியிட்டால் உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் அளிக்கலாம். பொதுமேடையில் சந்திக்க தயார். நானும், ஓ.பி.எஸ் அவர்களும் தயார். தேர்தலுடன்  தி.மு.கவின் சவால் முடிந்துவிடும். நாட்டின் முதல்வர் மக்களிடம் நீட் குறித்து பொய்யை பரப்புகிறார். 2010ல் நீட் கொண்டு வந்தது திமுக என மு.கஸ்டாலின் ஒப்புக்கொண்டுவிட்டார். நீட் என்ற நச்சு விதையை தமிழகத்தில் ஊன்றியது காங்கிரஸ், திமுக. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை தடுக்க அ.தி.மு.க பல வழக்குகளை தொடர்ந்தோம். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நீட் ரத்து என கூறினர்.

காங்கிரஸ் கட்சி அதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது காங்கிரஸ், தி.மு.க ஜெயலலிதா மறுசீராய்வு மனு அளிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை திமுக, காங்கிரஸ் பொருட்படுத்தவில்லை. அதன் பின்பு தான் 5 நீதி அரசர்கள் அமர்வுக்கு கொண்டு சென்றனர். ஸ்டாலின் அவர்கள் நீங்கள் எப்போது அழைத்தாலும் அதற்கு பதிலளிக்க நாங்கள் தயார். மதுரை மாநகராட்சியில் அதிமுக 100 இடங்களில் போட்டியிடுகின்றனர் 100லும் வெற்றிபெற வேண்டும். 70% அறிவிப்பு நிறைவேற்றி விட்டதாக தி.மு.க கூறி பச்சை பொய் சொல்கிறது. தேர்தல் சமயத்தில் 525 வாக்குறுதிகள் 400 வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என கேள்வி எழுப்பினார்.

Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு
கேட்கிறவன் கேனையாக இருந்தால் அதற்கு பின் வருவதை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் பொய் சொல்வதில் தான் மு.க ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். ஒரு படி மேல் சென்று உதயநிதி ஸ்டாலின் 90 சதவீதம் செய்வதாக பொய் சொல்கிறார். தி.மு.க என்ன சொல்ல முடியும் ஊழல், கொள்ளையடித்தை சொல்லித்தான் ஓட்டுக் கேட்க வேண்டும். பொய் சொல்லி ஆட்சிக்கு வர வேண்டுமென அவசியம் இல்லை.

தி.மு.கவில் கருணாநிதி அவருக்குப் பின் அவர் மகன் ஸ்டாலின் தற்போது முதல்வர் ஆகி இருக்கிறார் தற்போது அவரின் மகன் ஒரு குட்டி வந்திருக்கு, முழுவதும் பொய்யாக பேசி வருகிறார். ஊழலுக்கு சொந்தக்காரர்கள் தி.மு.கவினர். எந்த அமைச்சரும் தலைமை செயலகத்தில் இல்லை. எறியும் வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்பது போல அனைத்து அமைச்சரும் அவரவர் துறையில் ஊழல் செய்து கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இந்தியாவிலேயே  இலவச உணவு வழங்கிய அரசு தமிழக அரசுதான். தி.மு.க அரசு தை பொங்கலுக்கு வழங்கிய  பொருட்கள் தரமில்லை. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசு திமுக அரசு.

திமுக அரசு தை பொங்கல் வைக்க வெல்லம் கொடுக்கவில்லை வெள்ளத்தை கொடுத்துவிட்டார். தமிழக நிதி அமைச்சர் திறமையானவர், பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மத்திய அரசாங்கம் குறைத்தது. ஆனால் மாநில அரசான திமுக அரசு இதுவரை குறைக்கவில்லை. 25 மாநிலம் குறைத்தது, தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. கூட்டுறவு வங்கியில் 5 சவரண் கீழ் வைத்தால் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அரசின் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் நகை அடமான வைத்தனர்.

ஆனால் தற்போது திமுக அரசு தகுதியானவர்களுக்கு என கூறி வருகிறது. 13 லட்சம் பேருக்கு மட்டுமே கூட்டுறவு வங்கியில் கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 35 லட்சம் பேருக்கு ரத்து இல்லை. அவர்கள்  மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் அவரின் ஆசை தூண்ட வேண்டும் என திரைப்படத்தில் வசனம்  வரும். அது போல திமுக செய்துள்ளது. கூட்டுறவு வங்கியில் திமுக அரசை நம்பி நகை வைத்து ஏமார்ந்த 35 லட்சம் பேர் எங்களுக்குத்தான ஓட்டு போடுவார்கள். திமுகவிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் பெட்டியில் தூங்குகின்றன. திமுக கட்சியினர் விஞ்ஞான மூளையுடன் செயல்படும். கட்சிகாரர்களை நம்பி திமுக அரசு நடக்கவில்லை, ஏஜென்ட்டை நம்பி நடக்கிறது. கட்சியனரை ஸ்டாலின் நம்பவில்லை, அ.தி.மு.கவை சேர்ந்தவர் மதுரை மேயராக வரவேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget