Local body election | வெற்றியோ தோல்வியோ அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்தி கொள்ள சாவியை ஒப்படைத்த வேட்பாளர்
மானாமதுரை 18வார்டு பகுதியில் சுயேட்சை வேட்பாளராக ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி கைபை சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 18வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ஆம்புலன்ஸ் டிரைவர் மனைவி ராஜேஸ்வரி. இவருடைய கணவர் ராஜேந்திரன் மானாமதுரை பகுதியில் 20ஆண்டுகளுக்கு மேலாக சேவை எண்ணத்தோடு சேவை செய்து வருகின்றர் விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி செய்து வருகிறார் ராஜேந்திரன்.
இந்த நிலையில் மானாமதுரை 18வார்டு பகுதியில் சுயேட்சை வேட்பாளராக ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி கைபை சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். போட்டியிடும் இராஜேஸ்வரி பொது மக்களுக்கு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் டொம்போ வண்டியை அவசார தேவைக்கு எப்போதும் எந்த நேரம் ஆனாலும் எடுத்து கொள்ளவதற்க்கு வார்டு மக்களுக்களிடம் ஆம்புலன்ஸ் சாவியை ஒப்படைத்து விட்டு ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கணவன், மனைவி இருவரும் மானாமதுரை 18வது வார்டு பகுதியான பர்மா காலனி, காட்டு நாய்க்கன் குடியிருப்பு, சோமசுந்தரம் காலனி, வெள்ளையன் தோப்பு பகுதிகளில் ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்ட இவர்கள் காட்டு நாயக்கர் குடியிறுப்பில் உள்ள பொது மக்களுக்கு கழிப்பறை கட்டுவதற்கு 2 செண்ட் இடத்தையும் இலவசமாக கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து உள்ளார். எல்லோரும் வெற்றி பெற்றால் வாக்குறுதி நிறைவேற்றுவோம் கூறுவார்கள் ஆனால் இவர் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு பொது மக்களிடம் ஒட்டு சேகரித்து வருவது வார்டு மக்களிடம் நம்பிக்கையும் வரவேற்பை பெற்று உள்ளது