Local Body Election | ”தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் என்ன அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார் என்று பாருங்கள்” - நாஞ்சில் சம்பத்
”ரோல் மாடல் முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்..”
நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”2000 ஆண்டு கால தமிழக அரசியலில் தமிழினம் தற்போது மீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தன்னுடைய சரித்த சாதனைகளால் அடக்கம் நிறைந்த தமிழக முதல்வர் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றி வருகிற காலக்கட்டம் இது. அரசியலில் பகை மறந்து நாகரிக அரசியலை செய்யும் தமிழக முதலமைச்சர் சிறப்பாக தலைமையில் தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் நடந்து வருகிறது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைந்தபோது அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் செல்வதற்கு முன்னதாகவே அவரது வீட்டுக்குச் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
ஆகவே பகை பாராட்டுகின்ற அரசியலும், சந்தடி சாக்கில் சிந்து பாடுகின்ற அரசியலும் முதல்வர் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்பதை அவர் பதவியேற்ற பத்தே நாட்களில் நிரூபித்தார், இந்தியத் துணைக்கண்டத்தின் ரோல் மாடல் முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்.
தற்போது நடப்பது இக்கட்டான காலகட்டம், தமிழகத்தை பாசிசம் சுற்றி வளைக்கிறது, அண்ணாமலை என்கிற ஆட்டுக்குட்டி பயல் இந்த நாட்டில் அலப்பறை அரசியலை கொடுத்து கொண்டு ஆயிரம் குடைச்சல்களை கொடுத்து வருகிறார், சமயம் பார்த்து இந்த ஆட்சியை திமுக நடத்தவில்லை, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாயை கொலை செய்த தந்தை மற்றும் சித்தியின் சித்திரவதை தாங்க முடியாத நிலையில் மரணத்தை தேடி லாவண்யாவின் உயிரிழப்பை வைத்து மத மாற்றம் நடக்கிறது என அரசியல் செய்தனர். மதசாயம் பூச லாவண்யாவின் மரணத்திற்கு பாரதிய ஜனதா கட்சி 10 லட்சம் கொடுத்தீர்கள், கொரோனா நோயில் கொத்து கொத்தாக செத்தவர்களுக்கு 1 ரூபாய் கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பினார்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு ஸ்டாலின் யார் என்று அவர் கலைஞரின் புதல்வன் நெருக்கடி நிலையை சந்தித்த தலைவரின் பிள்ளை அவர், நீட் தேர்வு குறித்து விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று சவாலுக்கு அழைக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாஞ்சில் சம்பத் சவால் விடுகிறேன், உன்னோடு விவாதிக்க நான் தயார், தேதி நேரம் சொன்னால் நான் அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயார், கம்பராமாயணத்தையே சேக்கிழார் எழுதியவர் என்று சொன்னவர், ஒரு புத்தக விழாவில் ஆபிரகாம் லிங்கன் பெயரைக் கூட சரியாக சொல்லத் தெரியவில்லை, சமூக நீதி என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை, கல்வியில் சிறந்த தமிழ்நாடு இந்தியாவில் ஸ்டாலின் ஆளுகிற தமிழ்நாடு என்று நாங்கள் நிலை நிறுத்தி இருக்கிறோம், மருத்துவ கட்டம்மைப்பில் இந்தியாவிற்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கிறோம், வேளாண்மை உற்பத்தி தொழில் வளர்ச்சி உள்ளிட்டவர்களுடன் அமைதியின் புகலிடமாக தமிழகம் திகழ்கிறது, எல்லோருக்குமான முதலமைச்சர் காவி அணிந்து கொண்டு இருப்பாரா?
உத்தரபிரதேசத்தில் அனைத்து மக்களுக்கான முதலமைச்சர் காவி உடை அணியும்போது இஸ்லாம் மீது நம்பிக்கை வைத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் என்ன குற்றம் என பேசினார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நிறைவேற்றிய தீர்மானத்தின் போது பாரதிய ஜனதா கட்சி வெளியேற்றியதில் அர்த்தம் இருக்கிறது. அதிமுக அந்தக் கூட்டத் தொடரில் இருந்து வெளியேறியது ஏன் எனத் தெரியவில்லை, பாஜகவுடன் கூட்டணி முடிந்தது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு சொல்ல தைரியமில்லை, ஜனநாயகத்தின் நாற்றங்கால் ஆனா உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தலை நடத்தாமல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏமாற்றியது, உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தோல்வியை தழுவும் என பயம் அதனால் அதற்கான முயற்சியை அவர்கள் எடுக்கவில்லை.
இனி ஸ்டாலின் உள்ளவரை அவர்தான் தமிழகத்திற்கான முதலமைச்சர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்பவே உரிமையில்லாத ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார், அரசியல் வரலாற்றிலேயே ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் கூட்டத்தொடரில் வைத்து நிறைவேற்றி அதனையே ஆளுநருக்கு அனுப்பிய சக்தி மிகுந்த தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார், தமிழகத்தில் பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது, இந்தியாவின் அனைத்து தலைவர்களும் தமிழக முதல்வரை கண்டு ஆச்சரியமாக பார்க்கிறார்கள், தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் தமிழக முதலமைச்சர் என்னவெல்லாம் அதிசயங்களை நிகழ்த்தப் போகிறார் என்று, தமிழகத்தில் தவறு செய்த எம்பியை கிளை சிறையில் அடைத்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் ஆட்சி அல்ல மனுநீதி சோழனின் ஆட்சி” என தெரிவித்தார்.