Lok Sabha Election 2024 Results: புதிய சாதனை படைப்பாரா மோடி? அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் பட்டியல்..!
Lok Sabha Election 2024 Results: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரலாற்றில் இதுவரை, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Lok Sabha Electon 2024 Result: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரலாற்றில் இதுவரை, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 பேரின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள மக்களவை தேர்தலில், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதோடு, நடப்பு தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, நரேந்திர மோடி புதிய சாதனை படைத்து புதிய சாதனை படைப்பார் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
10. அசுங்கா சங்க்தம்:
கடந்த 1999ம் ஆண்டு தேர்தலில் நாகலாந்து மாநிலத்தின் நாகலாந்து தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அசுங்கா சங்க்தம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
9. கதிரியா வல்லபாய்:
கடந்த 1998ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் தொகுதியில், பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட கதிரியா வல்லபாய் 3 லட்சத்து 89 ஆயிரத்து 617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
8. சோமு என்.வி.என்
கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தின் வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட சோமு என்.வி.என் 3 லட்சத்து 89 ஆயிரத்து 617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
7. ராம் விலாஸ் பஸ்வான்:
கடந்த 1977ம் ஆண்டு தேர்தலில் பீகார் மாநிலத்தின் ஹஜ்புர் தொகுதியில், பாரதிய லோக் தளம் சார்பில் போட்டியிட்ட ராம் விலாஸ் பஸ்வான் 4 லட்சத்து 25 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
6. சந்தோஷ் மோகன் தியோ
கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் திரிபுரா மாநிலத்தின் திரிபுரா மேற்கு தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்தோஷ் மோகன் தியோ 4 லட்சத்து 28 ஆயிரத்து 984 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
5. சி.எம். சாங்:
கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் நாகலாந்து மாநிலத்தின் நாகலாந்து தொகுதியில், நாகலாந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட சி.எம். சாங் 4 லட்சத்து 83 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
4. ராம் விலாஸ் பஸ்வான்
கடந்த 1989ம் ஆண்டு தேர்தலில் பீகார் மாநிலத்தின் ஹஜ்புர் தொகுதியில், ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ராம் விலாஸ் பஸ்வான் 5 லட்சத்து 4 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3. நரேந்திர மோடி:
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட நரேந்திர மோடி 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2. அனில் பாசு:
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தின் அரம்பாக் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட அனில் பாசு 5 லட்சத்து 92 ஆயிரத்து 502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1. சி.ஆர். பட்டீல்:
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலத்தின் நவசரி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு சி.ஆர். பட்டீல் 6 லட்சத்து 89 ஆயிரத்து 668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.