மேலும் அறிய

MK Stalin: 35 வருடங்களில் ஸ்டாலின் கண்ட முதல் தோல்வி.. அசெம்பிளிக்கு நோ எண்ட்ரி, மொத்தமே ரெண்டு தொகுதி

Kolathur Election Results 2026: தமிழ்நாடு அரசியலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி கண்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Kolathur Election Results 2026: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 1991ம் ஆண்டுக்குப் பிறகு, முதல்முறையாக களமிறங்கிய தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். 

ஸ்டாலினை ஏமாற்றிய கொளத்தூர்

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளானது, தொடர்ந்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்தது இல்லை என்ற வரலாற்றை மீண்டும் நிரூபித்துள்ளது. அதைகாட்டிலும் கடந்த மூன்று முறையும் கொளத்தூர் தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தெடுக்கப்பட்ட, திமுக தலைவர் ஸ்டாலின் நான்காவது முறையாக வெற்றி வாகை சூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்முறையாக தேர்தலில் களமிறங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறக்கப்பட்ட வி.எஸ். பாபுவிடம் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வியை தழுவியுள்ளார். முதலமைச்சர் தொகுதி என நட்சத்திர அந்தஸ்தை பெற்று, ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோதும் திமுக தலைவர் கண்டிக்கும் தோல்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

35 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் கண்ட தோல்வி:

தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியல் தலைவர்களில் மு.க. ஸ்டாலின் மிகவும் முக்கியமானவராக விளங்குகிறார். தேசிய அரசியலில் பாஜகவிற்கு எதிராகவும், தீவிரமாகவும் குரல் கொடுக்கும் வலுவான தலைவராக பார்க்கப்படுகிறார். அத்தகைய நபர் தமிழக அரசியலில் களம் கண்ட நேரடி தேர்தலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகுமுதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். குறிப்பாக முதலமைச்சராக முதல்முறையாக பதிவியேற்று ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்த நிலையில், அடுத்த தேர்தலிலேயே தோல்வியை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1991ம் ஆண்டுக்குப் பிறகு முதல் தோல்வி:

  • கடந்த 1984ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தனது தேர்தல் பயணத்தை தொடங்கிய ஸ்டாலினுக்கு முதல் வாய்ப்பு தோல்வியாகவே அமைந்தது
  • இருப்பினும் 1989ம் ஆண்டு மீண்டும் அதே ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். 
  • 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கியவர் மீண்டும் ஒருமுறை வெற்றி வாய்ப்ப்பை இழந்தார்
  • 1996ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் கண்ட ஸ்டாலின் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்
  • அதே ஆண்டில் நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலிலும் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரானார்
  • தொடர்ந்து 2001ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலிலும் வெற்றி பெற்றாலும், 2002ம் ஆண்டே அந்த பதவியை ராஜினாமா செய்தார்
  • இதனிடையே, 2001ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்
  • அதன்பிறகு 2006ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் ஐந்தாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவானார்
  • 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து மாறி, 2011ம் ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
  • அதன் பிறகு 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

மூன்று தசாப்தங்களுக்குப் பின் ஸ்டாலின் கண்ட தோல்வி:

1991ம் ஆண்டுக்குப் பிறகு களம் கண்ட எந்தவொரு தேர்தலிலும் தோல்வியையே கண்டிராத ஸ்டாலின், 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். இது அவருடைய அரசியல் பயணத்தில் மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget