Karnataka Election Result: ’நாங்கள் ஒரு சிறிய கட்சி, எங்களுக்கு எந்த தேவையும் இல்லை’ - மஜத தலைவர் குமாரசாமி
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யார் ஆட்சிக்கு வரப்போவது என்பதில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைவராக இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
இப்படியான நிலையில், “வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் இன்னும் 2-3 மணி நேரத்தில் தெளிவாகிவிடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 30-32 இடங்களை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சிறிய கட்சி, எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். எங்கள் கொள்கைக்கு உட்பட்டு யார் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் பேச தயார். கூட்டணி குறித்து எந்த கட்சியும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை” என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Karnataka Election Result: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..! கர்நாடகாவில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார்?