மேலும் அறிய

சொந்த தொகுதியில விரட்டுவாங்க.. அதனால கோவையில் போட்டுபோடும் அண்ணாமலை - கனிமொழி பிரச்சாரம்

கணக்கு தப்பாக போகி கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை எதிர்த்து நாம் போட்டியிடுகிறோம். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார்.

கோவை துடியலூர் பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து, கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும். தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விட்டுவிடுவார்கள் என்று, புதிய தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். கணக்கு தப்பாக போகி கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை எதிர்த்து நாம் போட்டியிடுகிறோம். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார்.

தவறான விஷயங்களை, பொய்களை பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கலாம். தலைவர் கலைஞர் தந்த கோட்டாவில் தான் நீங்கள் படித்து இருக்கின்றீர்கள் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். பொய் செய்திகளை வெளியிடவே பாஜகவில் தனி அமைப்பு வைத்திருக்கின்றனர். கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கப்பட்ட பின்னரும், அதற்கு அடிக்கல் நாட்டிய புகைப்படத்தை வெளியிட்டு மருத்துவமனை கட்டவில்லை என பொய் பிரச்சாரம் செய்தனர். இப்படி ஒவ்வொரு இடத்திலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி பொதுமக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

மீண்டுமொரு சுதந்திர போராட்டம்

தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் பிள்ளைகள் வசதியாக, மரியாதையாக நல்ல வேலை கிடைத்து, வசதியுடன் வாழ வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ளவர்களின் கனவு. மணிப்பூரில் உள்ளவர்களின் கனவு தங்கள் பிள்ளைகளை உயிரோடு பார்ப்போமா என்பதாக இருக்கிறது. பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களின் மனநிலை தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் போதும் என்பதாக இருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சொந்த தொகுதியில விரட்டுவாங்க.. அதனால கோவையில் போட்டுபோடும் அண்ணாமலை - கனிமொழி பிரச்சாரம்

பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் இவர்களில் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன? மணிப்பூரில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள். பிரதமர் இது குறித்து கேட்டிருக்கின்றாரா? 44 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்து வருகின்றன. பெண்கள் மீதான குழந்தைகள் மீதான கொடுமை இரண்டு மடங்காக மாறி இருக்கின்றன. மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நடந்த தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என போராடினர். சேலத்தில் இருந்த இரண்டு விவசாயிகள் பிஜேபிக்கு பிரமுகருக்கு எதிராக செயல்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். பாஜகவில் குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் சேர்ந்தால் அவர்களின் குற்றம் இல்லாமல் போகின்றது.

தேர்தல் பத்திர ஊழல்

அமலாக்கத்துறை அதிகாரிகளை ரைய்டு விட்டு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கின்றனர். கோடக் மகேந்திரா நிறுவனத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே 10 கோடிக்கு தேர்தல் பத்திரம் பாஜகவினருக்காக வாங்கியுள்ளனர். தேர்தல் பத்திரம் ஒரு சட்டபூர்வமான ஊழல். இதில் பாஜகவினர் ஊழல் பற்றி பேசி வருகின்றனர். டெல்லி முதல் மற்றும் துணை முதல்வரை சிறையில் வைத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன சட்டம் வேண்டுமானால் கொண்டு வருவார்கள். விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் இவர்கள் அமல்படுத்திருக்கின்றனர்.

பாஜகவின் இது போன்ற கொடிய திட்டங்களுக்கு துணை நின்றவர்கள் அதிமுகவினர். இன்று அவர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கின்றார். அதனை நம்ப வேண்டாம். மக்களுக்கு நடந்த கொடுமை அனைத்துக்கும் அதிமுகவிற்கு பங்கு உண்டு இரண்டு. திமுக அதிமுக இடையே தான் போட்டி. பிஜேபி பாவம் நானும் இருக்கேன் நானும் இருக்கேன் என சொல்லிக் கொண்டிருக்கிறனர். இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறையாவது பிரதமரை எதிர்த்து பேசியிருக்கின்றாரா? திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசும், எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை. அவர்கள் இருவரும் ஓட்டு கேட்டு வருவார்கள், அவர்களை திருப்பி அனுப்பி கேள்வி கேட்க வேண்டிய நேரம்.

ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு காணப்படும் என மு.. ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். நிச்சயமாக அது சரி செய்யப்படும். 68,700 கோடி ரூபாய் கடனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரத்து செய்து இருக்கின்றார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது சிலிண்டர் விலை குறைக்கப்படும். பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி 10 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஆனால் பாஜக என்ன செய்திருக்கிறார்கள்? நம்ம வீட்டுப் பெண்கள் படிக்க கூடாது என்பதற்காக கல்வி கொள்கையை கொண்டு வந்து நுழைவுத் தேர்வு வைத்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் அடிமையாக வைத்திருந்தது போல, மீண்டும் நம்மை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெரும்பான்மை மக்களுக்கு பெரும்பாலும் எதிராக இருப்பவர்கள்.

யாருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது இல்லை என்பது முக்கியமல்ல. நம்ப கூடியவர்களை யார் பாதுகாக்கிறார்கள் என்பதே முக்கியம். நம் நிதியை அனைத்தும் ஒன்றிய அரசாங்கம் பிடுங்கி கொண்டு செல்கின்றனர். ஒரு ரூபாய் தந்தால் 28 பைசா தருகின்றார்கள். மற்ற மாநிலங்களுக்கு இரண்டு ரூபாய் தருகின்றார்கள். இத்தனை நெருக்கடியிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget