மேலும் அறிய

Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!

Exit Polls 2026 Explained: ஜனநாயகத் திருவிழாவின் கடைசிக்கட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: 1996 முதல் இன்று வரை - ஒரு விரிவான பார்வை

இந்தியத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற உடனேயே மக்களின் மனநிலை எப்படி உள்ளது, யாருக்கு மக்கள் மகுடம் சூட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக எக்ஸிட் போல் (Exit Polls) பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.

வரலாற்றுப் பின்னணி

முதன்முதலாக 1930-களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இந்தப் போக்கு உருவானது. தொடர்ந்து 1967ஆம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் வாரன் மிட்டோஃப்ஸ்கி கெண்டகி மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் இந்த கருத்துக்கணிப்பை விரிவாக்கினார். நெதர்லாந்திலும் எக்ஸில் போல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஊடகங்கள் இதைப் பின்பற்றி கருத்துக் கணிப்புகளைப் பரவலாக்கின.

இந்தியாவில் எக்ஸிட் போல்களின் பயணம் 1996-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி முதன்முதலில் நாடு தழுவிய அளவில் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டது. இது இந்தியத் தேர்தல் அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. வாக்காளர்கள் தங்களது வாக்கைச் செலுத்திவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் யாரிடம் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

எக்ஸிட் போல் செயல்படும் விதம்


தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை விட, எக்ஸிட் போல்கள் துல்லியமானவை எனக் கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உண்மையாக வாக்களித்த மக்களிடம் நடத்தப்படுபவை. மாதிரி அளவு, புவியியல் பரவல் மற்றும் பல்வேறு சமூகப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை கணிக்கப்படுகின்றன.


Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!

கட்டுப்பாடுகள் ஏன்?

1980 வாக்கில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பாகவே ஓர் ஊடகத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இதற்குப் பிறகு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு தேர்தலின் அனைத்துக் கட்ட வாக்குப் பதிவுகளும் முடிவடைந்த பின்னரே எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட வேண்டும். இது வாக்காளர்களின் மனநிலையைத் திசை திருப்பாமல் இருக்கப் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

நம்பகத்தன்மை குறித்த விவாதம்


எக்ஸிட் போல்கள் எப்போதும் துல்லியமாக இருப்பதில்லை என்பது ஒரு தொடர் விவாதமாக உள்ளது. உதாரணத்துக்கு 2004 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான எக்ஸிட் போல்கள் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது.

என்ன காரணம்?

வாக்காளர்கள் உண்மையான தகவலை மறைப்பது, போதுமான மாதிரி அளவு இல்லாதது மற்றும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் ஏற்படும் பிழைகள் காரணமாக எக்ஸிட் போல்கள் தோல்வியடைய நேரலாம் என்று கூறப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget