உஷார்...இந்த உணவுகளை சாப்பிட்டால் முடி கொட்டிடும்.. கவனம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கேக்குகள், கூல்டிரிங்க்ஸ், ஸ்வீட்ஸ் அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதனால் முடி உதிர்தல் அதிகரிக்கும்.

பர்கர்கள் மற்றும் பொரித்த உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது. இவை கூந்தலுக்கு தேவையான வைட்டமின்களை குறைக்கும்.

சிப்ஸ் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் முடி பலவீனமடையும்.

வெள்ளை ரொட்டி மற்றும் மைதா பொருட்கள் இரத்த சர்க்கரையை அதிகரித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.

மதுபானம் உடலில் புரத உறிஞ்சுதலைக் குறைக்கிறது. புரதம் கூந்தலுக்கு மிகவும் அவசியம்.

வைட்டமின் ஏ அவசியம் ஆனால் அதிகமாக இருந்தால் முடி உதிரலாம்.

எண்ணெயில் அதிகமாக பொரித்த உணவுகள் தலையில் எண்ணெய் சமநிலையை சீர்குலைக்கும்.

சில கடல் மீன்களை அதிகமாக சாப்பிட்டால் முடி உதிரும் வாய்ப்பு உள்ளது.

அதிகமாக டயட் செய்து புரதம் எடுத்துக் கொள்ளாவிட்டால் முடி பலவீனமடையும்.

சோடாக்கள் மற்றும் மென்பானங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதில்லை. நீண்ட கால அடிப்படையில் இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.