மேலும் அறிய

இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!

தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது !

விழுப்புரம் : தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது. அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. கடந்த காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு:

 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்கிற செய்தியை தான் எல்லா கருத்துக்கணிப்புகளும் தெளிவாக கூறியுள்ளனர். பாஜக எத்தனை பகல் வேடம் போட்டாலும். மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். 

வருகின்ற காலத்தில் திமுக எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பல்வேறு துறைகளில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக அரசாங்கம் செய்ய தவறிவிட்டது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இரட்டை இலக்கு பொருளாதாரம் வளர்ச்சி என அமைச்சர்கள் பெருமை பேசுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் உழைப்பாளர் தான். இரட்டை இலக்க வளர்ச்சியை கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன கொடுக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. 

வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது. 

வணிக சிலிண்டரின் விலை இன்றைக்கு மட்டுமே 900 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோர கடைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள யுத்தம் தான். தமிழ்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும். 

பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும். என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
Embed widget