(Source: ECI/ABP News/ABP Majha)
DMK Candidates: திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்- புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு
DMK candidates list: திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய வேட்பாளர்கள் 11 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்துக்கு முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்க உள்ளது.
திமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு, மக்களவைக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே, திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் 21 வேட்பாளர்கள் பட்டியல்
1. தூத்துக்குடி- கனிமொழி,
2. தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்,
3. வட சென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
4. தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
5. மத்திய சென்னை- தயாநிதி மாறன்,
6. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
7. காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம்,
8. அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,
9. திருவண்ணாமலை- அண்ணாதுரை,
10. தர்மபுரி- ஆ.மணி ,
11. ஆரணி- தரணிவேந்தன்,
12. வேலூர்- கதிர் ஆனந்த்,
13. கள்ளக்குறிச்சி- மலையரசன்,
14. சேலம்- செல்வ கணபதி,
15. கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்,
16. பெரம்பலூர் - அருண் நேரு
17. நீலகிரி - ஆ.ராசா,
18. பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
19. தஞ்சாவூர் - முரசொலி
20. ஈரோடு- பிரகாஷ்
21. தேனி- தங்க தமிழ்ச்செல்வன்.
வேட்பாளர்கள்: என்ன படிப்பு?
பட்டதாரிகள் – 19 பேர்
முதுகலை பட்டதாரிகள் – 12 பேர்
முனைவர் -2 பேர்
மருத்துவர்கள் 2 பேர்
வழக்கறிஞர்கள் -6 பேர் ஆவர்.
பெண்கள் 3 பேருக்கு வாய்ப்பு
வேட்பாளர்கள் பட்டியலில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசி தொகுதியில் மருத்துவர் ராணி என பெண்கள் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கனிமொழி, தமிழச்சி ஆகியோர் ஏற்கெனவே எம்.பி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.