மேலும் அறிய

Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

விருதுநகர் தொகுதியில தேமுதிக வேட்பாளர் வீழ்த்தப்படவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற  எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பாஜக தரப்பில் இருந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதியாக அதிமுகவுடன் தேமுதிக கைகோர்த்தது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. 

இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தோற்றார். இது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் இ-மெயில் வழியாக புகார் மனு அளிக்கப்பட்டது” என தெரிவித்தார். 

மேலும், ”தேமுதிக இனி வரும் காலங்களில் வீர நடை போடும். விஜயபிரபாகர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. விருதுநகரில் மட்டும் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை. கடைசியில் எண்ணினார்கள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  எனக்கு தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அதிமுக - தேமுதிக இணைந்து செயல்பட்டுள்ளோம். தேர்தல் தோல்விக்கு யாரையும் குறை சொல்லவில்லை. மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் தேமுதிக - அதிமுக கூட்டணி தொடரும்.

தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் நல்ல முறையில் வாக்குகளை பெற்றுள்ளனர். மத்திய சென்னையை தவிர மற்ற தொகுதிகளில் நிறைய வாக்குகள் கிடைத்துள்ளது. விருதுநகர் விஜய பிரபாகரன் கடைசி வரை போராடி தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எத்தனையோ தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம். தோல்வி என்பது புதிதல்ல” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget