மேலும் அறிய

ஓட்டு போட வாக்குச் சாவடி செல்லும் முன் இதை கவனிக்கவும்.. இந்த 12 ஆவணத்தில் ஒன்று இருந்தால் போதும் !

வாக்குப்பதிவின் போது ஒரு வாக்காளர், வாக்காளர் தகவல் சீட்டை மட்டுமே கொண்டு சென்று வாக்கினை செலுத்த இயலாது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026–ஐ முன்னிட்டு, வருகின்ற 23.04.2026 அன்று நடைபெற உள்ள வாக்குபதிவின் போது வாக்காளர்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்குகளைச் செலுத்தலாம்.

விரைவான வாக்குப்பதிவுக்கும் உதவுகிறது.
 
தமிழ்நாட்டில் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026–ஐ முன்னிட்டு, வாக்காளர் தகவல் சீட்டுகளை (VIS) விநியோகிக்கும் பணியினை  இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தத் தகவல் சீட்டில் வாக்காளரின் விவரங்கள். வாக்குச் சாவடி அமைவிடம். வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், வாக்குச் சாவடி வரைபடத்தின் நகல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஒரு QR குறியீடு வாக்காளர் விவரங்களை விரைவாகத் தேட, ஒப்பிட உதவுகிறது. மேலும், இது வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும். விரைவான வாக்குப்பதிவுக்கும் உதவுகிறது.
 
எளிதாக அடையாளம் காண்பதற்கு
 
வாக்காளர்களின் வசதிக்காக, எளிதாக அடையாளம் காண்பதற்காகவும் பயன்படுத்துவதற்காகவும், வாக்காளரின் பாகம் எண் (Part number) மற்றும் வரிசை எண் ஆகியவை இந்தச் சீட்டில் தெளிவாகத் தெரியும்படி அச்சிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) நேரடியாக வீடு வீடாகச் சென்று இந்தச் சீட்டுகளை விநியோகிப்பார்கள்.தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் (PwDs) முழுமையான மற்றும் ஆக்கபூர்வமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக, பார்வைக் குறைபாடுள்ள அல்லது பார்வையற்றவர்களுக்கு, வழக்கமான தகவல் சீட்டுடன் கூடுதலாக பிரெய்லி வசதியுடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டுகள் (AVIS) வழங்கப்படுகின்றன.
 
முகவர்கள் BLO-க்களுடன் உடன் செல்லலாம்
 
தகவல் சீட்டுகள் விநியோகத்தின் போது வாக்குச் சாவடி முகவர்கள் (BLA)/வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் BLO-க்களுடன் உடன் செல்லலாம். இந்தத் தகவல் சீட்டுகளை (தேர்தல் பொருள்) அங்கீகரிக்கப்படாத வகையில் விநியோகிப்பது அல்லது வைத்திருப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் தொடர்புடைய விதிகளின் கீழ் விதிமீறலாகக் கருதப்படும். இதற்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
 
12 அடையாள சான்றுகள்
 
வாக்குப்பதிவின் போது ஒரு வாக்காளர், வாக்காளர் தகவல் சீட்டை மட்டுமே கொண்டு சென்று வாக்கினை செலுத்த இயலாது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள சான்றுகளான ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள் வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card) , தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட  திறனட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் , மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாரளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை  இவைகளில் வாக்காளர்கள் மேற்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தங்களது வாக்கினை செலுத்தலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்தலை சீராகவும், நியாயமாகவும் நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget