மேலும் அறிய

Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?

Assembly Election 2026 Voter Turnout: புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் மதியம் 1 மணிக்கு 56+சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 9) சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, பாண்டிச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

1 மணி நிலவரம்

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு 56+சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு தடையின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய, 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் 126 தொகுதிகளுக்கும் கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி  நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம் இதோ!

புதுச்சேரி - 56.47 சதவீத வாக்குப்பதிவு

கேரளா - 58.89 சதவீத வாக்குப்பதிவு

அசாம்- 58.26 சதவீத வாக்குப்பதிவு

Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?

காலை 9 மணி நிலவரம்

அசாமில் காலை 9 மணிக்கு 17.87 சதவீத வாக்குகள் பதிவாகின. கேரளாவில் 16.23 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும் செலுத்தப்பட்டு இருந்தன.

காலை 11 மணி நிலவரப்படி, அசாமில் 38.92 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கேரளாவைப் பொறுத்தவரை 33.28 சதவீத வாக்குகளை மக்கள் செலுத்தி இருந்தனர். அதே நேரத்தில் புதுச்சேரியில் 37.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

எப்போது வரை வாக்குப் பதிவு?

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி அன்று மொத்தமாக வெளியாகின்றன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget