Assembly Election Results 2021 Live: | ஐந்து மாநிலங்களுக்கான முடிவுகள் 2021| 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் ஷைலஜா டீச்சர்..
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலத் தேர்தல்கள் முன்னிலை பின்னிலை விபரங்கள்:
LIVE
![Assembly Election Results 2021 Live: | ஐந்து மாநிலங்களுக்கான முடிவுகள் 2021| 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் ஷைலஜா டீச்சர்.. Assembly Election Results 2021 Live: | ஐந்து மாநிலங்களுக்கான முடிவுகள் 2021| 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் ஷைலஜா டீச்சர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/02/1baf1505e1f82aa76656df0cb7645ce2_original.jpg)
Background
1953 வாக்கு வித்தியாசத்தில் நந்திகிராமில் தோல்வியுற்றார் மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகள்-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மேற்கு வங்கத்தில் வலுவான முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to the Chief Minister of West Bengal, @MamataOfficial Didi on her party’s victory in West Bengal assembly elections. My best wishes to her for her next tenure.
— Rajnath Singh (@rajnathsingh) May 2, 2021
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சரத் பவார் வாழ்த்து
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 216 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations @MamataOfficial on your stupendous victory!
— Sharad Pawar (@PawarSpeaks) May 2, 2021
Let us continue our work towards the welfare of people and tackling the Pandemic collectively.
நீங்கள் மக்களுக்கான ஆட்சியை தந்ததால் மீண்டும் மக்கள் உங்களை தேர்வு செய்துள்ளனர்'- பினராயி விஜயனுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து
கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி 93 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்க போகும் பினராயி விஜயனுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், "நீங்கள் மக்களுக்கான ஆட்சியை தந்ததால் மீண்டும் மக்கள் உங்களை தேர்வு செய்துள்ளனர். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
Heartfelt congratulations @vijayanpinarayi sir.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021
People of Kerala have reposed faith in you becoz of ur pro-people governance.
நந்திகிராம் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி பின்னடைவு
நந்திகிராம் தொகுதியில் 16 சுற்றுகளின் முடிவில் பாஜகவின் சுவந்து அதிகாரி 6 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)