மேலும் அறிய

Anbumani Ramadoss: வெற்றி நமதே.. விழிப்புடன் இருங்கள்.. அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!

நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நாளில் அதிமுக, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் நிலையில் பதிவான வாக்குகள் அனைத்து மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களாக செயல்படுபவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

அதன்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக - பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு - பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க. பா.ஜ.க. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.

நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget