Urban Local Body Election: ''அதிமுகவின் பாரம் குறைஞ்சிட்டு.. ஒரு வாரமா சந்தோஷம்தான்' அதிரடியாக பேசிய சி.வி சண்முகம்
Tindivanam Urban Local Body Election 2022: கூட்டணியில் இருந்து பாஜக பாமக விலகியதால் அதிமுகவினர் சந்தோஷம்; தொண்டர்களில் இருந்து தலைவர்களை வரை உற்சாகமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சூசகம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஒருபக்கம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பிரச்சாரத்தை தொடங்கினார். மறுபக்கம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
CV Shanmugam Speech: தமிழ்நாடு அரசு மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது - அதிமுக சி.வி.சண்முகம்
இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சென்னை சாலை, புறவழி சாலை அருகே உள்ள தனியார் ஹாலில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சி.வி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, கூட்டணியில் இருந்து விலகி போட்டியிடுவதை சூசகமாக குறிப்பிட்டார். அதாவது, அதிமுக தைரியமாக தனியாக நிற்க தயாராக உள்ளது. இப்போது அனைவரும் உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறார்கள்.
ஏன் என்று உங்களுக்கே தெரியும். அதிமுகவினர் ஒருவாரமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஒரு பெரிய பாரம் கொறஞ்சிருச்சி. யாரோ செய்த தவறுகளுக்கு நாம் பதில் சொல்லும் நிலையில் இருந்தோம், இப்போ அது இல்லை. அதிமுகவை விட்டு விலகிவிட்டது. அந்த பழியில் இருந்து ஒதுங்கிவிட்டோம். இதனால் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை உற்சாகமாக, நம்பிக்கையோடு உள்ளோம். நாளை நமது ஆட்சி அதிமுக தான் என்று தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், இடப்பங்கீட்டில் எந்த உடன்பாடு ஏற்படாததால், வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி போட்டியிடுவதை சூசகமாக குறிப்பிட்டார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்