Lok Sabha Election 2024: வெற்றி வாய்ப்பு உள்ளோருக்குத்தான் மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் - இபிஎஸ் திட்டவட்டம்
மக்களவைப் பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளதால் இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளோருக்கு மட்டும்தான் சீட் கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவின் தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்திப்போம் என ஏற்கனவே அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு கட்சி மேலிடம் தொடங்கி அடிமட்டம் வரை அனைவர் மத்தியிலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சியில் சீட் கொடுக்கப்படும். திமுக சென்னையில் பெய்த மழையினை திமுக படிப்பினையாக கொண்டிருந்தால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வெள்ளத்தினை சிறப்பாக கையாண்டிருக்கலாம். ஆனால் அந்த நேரதில் திமுக டெல்லியில் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது.