Tasmac Holiday : 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Tasmac Holiday : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் தேர்தல் - தீவிரமடையும் பிரச்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதி கட்ட தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்திடும் வகையில் பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப், தமிழக போலீஸ், முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையிலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் மதுபான கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் வருகிற 21.04.2026, 22.04.2026, 23.04.2026(வாக்குப்பதிவு நாள்), 04.05.2026 (வாக்கு எண்ணிக்கை நாள்) ஆகிய நாட்களில் மூடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12(2)ன்படி உரிமம் பெற்று இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள்,
4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் FL-2 முதல் FL-11 வரை (FL-6 தவிர) உரிமம் பெற்ற உரிமதலங்கள் அனைத்தும் 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 (திங்கட்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















