மேலும் அறிய

Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்

TN Paramedical Counselling 2024: துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2024- 25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.  

எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மருத்துவம் படிக்க விரும்பி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் கிடைக்கவில்லையென்றால் வேறு வாய்ப்புகளே இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவற்றைத் தாண்டி ஏராளமான துணை மருத்துவப் படிப்புகள் குவிந்து கிடக்கின்றன. 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எதுவுமில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

என்னென்ன படிப்புகள்?

பி.பார்ம், பி.பி.டி., நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியோகிராபி, கார்டியா பல்மனரி டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி,க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன.

அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம். வ்மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம். 

67,079 பேர் விண்ணப்பம்

இதற்கிடையே துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2024- 25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.  மொத்தம் 67,079 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர், ’’எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும். முன்பே கலந்தாய்வு நடத்தினால் மருத்துவக் கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவர்கள் இடங்கள் காலியாகி விடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (ஜூலை 6) தொடங்க உள்ள நிலையில், விண்ணப்பித்த மாணவர்கள், www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கலந்தாய்வு குறித்து அறியலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget