GOOGLE Scholarship: கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம்.. இதோ கூகுள் ஸ்காலர்ஷிப்: மிஸ் பண்ணாதீங்க..
பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, கூகுள் நிறுவனம் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கூகுள் ஸ்காலர்ஷிப்:
Venkat Panchapakesan Scholarships India என்ற பெயரில் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, கூகுள் நிறுவனமானது, 2 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்காலர்ஷிப் குறித்த விவரங்கள்:
கல்வித் தகுதி:
2022-23 ஆம் ஆண்டுக்கான பருவத்தில், ஏதேனும் ஒரு கல்லூரியில் முழு நேர பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பு:
கணிப்பொறி சம்பந்தமான படிப்புகள் படித்து கொண்டிருக்க வேண்டும்.( கணினி பொறியியல், கணினி தொடர்பான பட்ட படிப்புகள் )
ஊக்கத்தொகை:ரூ. 2,00,000
விண்ணப்பிக்கும் முறை: Build your future with Google " target=""rel="dofollow"> Build your future with Google என்ற இணையதளத்தில், மாணவர்கள் சுய விவர குறிப்புகளை(Resume) சமர்பிக்க வேண்டும். மேலும் கேட்கப்பட்ட இதர தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 14
தேர்வு செய்யப்படும் முறை:
மாணவர்கள், சமர்பித்த கட்டுரை மற்றும் சுய விவர குறிப்புகள்(Resume) உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் சமர்பிக்கும் கட்டுரைகளில் 400 வார்த்தைகள் இருக்கும் படியாக பார்த்து கொள்ள வேண்டும்.
குறிப்புகள்:
- இதற்கு முன் Venkat Panchapakesan Scholarship மூலம் பயன்பெற்றவ்ர்கள், இந்த முறை விண்ணப்பிக்க முடியாது. மாணவர்கள் ஒரு முறை மட்டுமே பெற தகுதி உடையவர்கள்.
- ஊக்கத்தொகை தொடர்பான, விரிவான தகவல்களுக்கு Build your future with Google " target=""rel="dofollow">Build your future with Google என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்
- மேலும் இந்த ஊக்கத்தொகை தொடர்பாக ஏதேனும், சந்தேகம் எழுந்தால் venkat-scholarships-2022@google.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்