மேலும் அறிய

UPSC Civil Services Prelims 2023: நாடு முழுவதும் நாளை யுபிஎஸ்சி தேர்வு; என்னென்ன கட்டுப்பாடுகள்?

குடிமைப் பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது. 

குடிமைப் பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது. 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

2022ஆம் ஆண்டில் 933 பேர் தேர்ச்சி 

இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று வெளியாகின. 

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். 

இந்த நிலையில் குடிமைப் பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது. 

இரு வேளைகள் தேர்வு

இரண்டு தாள்களும் காலை, மதியம் என இரு வேளைகளில் நடைபெற உள்ளது. பொது படிப்புகள் எனப்படும் ஜிஎஸ் (GS I) தாளுக்கான தேர்வு காலையிலும் சிசேட் (CSAT) தேர்வு மதியமும் நடைபெறுகிறது. 

காலை 9 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 11.30 மணிக்கு முடிகிறது. இதற்குக் காலை 9.20 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும். 

சிசேட் தேர்வு மதியம் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிகிறது. இதற்குத் தேர்வர்கள் மதியம் 2.20 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும். அதற்குப் பிறகு யாரும் உள்ளே சென்று தேர்வு எழுத முடியாது. 

தேர்வர்கள் மொபைல் போனை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அதேபோல பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ஸ் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது. 

அதே நேரத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் upsconline.nic.in அல்லது upsc.gov.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து, நுழைவுச் சீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget