மேலும் அறிய

UPSC CSE Registration:யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - இன்றே கடைசி - எப்படி?

UPSC Civil Services Registration 2024: யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றே (மார்ச் 6) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர்நிலையிலான நிர்வாகப் பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றே (மார்ச் 6) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.

யுபிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று, தெரிவு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும். 

வயது வரம்பு என்ன?

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களுக்கு வயது குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து, 32 வயது வரை இருக்கலாம். எனினும் சமூகங்களின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

என்ன தகுதி?

பட்டப் படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

யுபுஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

அதில், முதல் முறையாக விண்ணப்பிக்கும் தேர்வர்கள், பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், மொபைல் எண், இ- மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், இ – மெயில் முகவரி, மொபைல் எண், ஒரு முறை பதிவு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டு, ஓடிபியை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசித் தேதி கடைசித் தேதியாக இருந்தது. எனினும் சர்வரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், விண்ணப்பிக்க ஒரு நாள் அவகாசத்தை நீட்டித்து யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 6 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாட்டில் தேர்வு எங்கே?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.

அனுமதிச் சீட்டு https://upsconline.nic.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்படும். அதைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தபாலில் எந்த அனுமதிச் சீட்டும் வெளியிடப்படாது. விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் புகைப்படம், சமீபத்திய ஒன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக அறிவிக்கை வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு அறிவிக்கையைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271/ 011-23381125/ 011-23098543 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

யுபிஎஸ்சி இணையதள முகவரி: https://upsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget