மேலும் அறிய

UGC NET 2025: கல்லூரி பேராசிரியர் ஆகணுமா? நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படிங்க?

UGC NET June 2025: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 12) கடைசித் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை மே 13 இரவு 11.50 மணி வரை செலுத்தலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகச் சேரவும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றவும் யுஜிசி நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல இளையர் ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

ஜூன், டிசம்பர் மாதங்களில் நெட் தேர்வு

இந்தத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்துகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஜூன் மாத அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு மும்முரமாக நடைபெற்றது. விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மே 12) கடைசித் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை மே 13 இரவு 11.50 மணி வரை செலுத்தலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப் பிரிவினர்: ரூ.1,150

பொது-பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஓபிசி (க்ரீமி லேயர் அல்லாதோர்): ரூ.600

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள் / மூன்றாம் பாலினம்: ரூ.325

தேர்வு தேதிகள் 

யுஜிசி நெட் தேர்வு ஜூன் 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் ugcnet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

* முகப்புப் பக்கத்தில் UGC NET June 2025  - Click Here என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில் பதிவு செய்து, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும். 

* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

* அதேபோல தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம். 

விவரங்களை முழுமையாகக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-for-extension-of-dates-for-ugc-net-june-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

தேர்வர்கள் இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!
ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Embed widget