Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.

தங்கத்தின் அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. திருமணங்கள், பிறந்தநாள், தீபாவளி என முக்கிய விஷேசங்களுக்கு தங்கத்தை அதிகளவு வாங்கு குவிப்பார்கள். மேலும் இந்திய திருமண நிகழ்வுகளில் தங்கத்திற்கு என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அதே நேரம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை அலறவிட்டது.
2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2026ஆம் தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரம் என்ற உயரத்தை எட்டியது.
தங்கத்தின் விலை நிலவரம்
- ஜூலை 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து 1,08,480 ரூபாய்க்கு விற்பனை.
- ஜூலை 7-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,07,200 ரூபாய்க்கு விற்பனை.
- ஜூன் 8 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து, 13,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,640 ரூபாய்க்கு விற்பனை. மாலையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 13,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,06,600 ரூபாய்க்கு விற்பனை
- ஜூன் 9ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,06,360 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13,350 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,06,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்று கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















