மேலும் அறிய

JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்

JanaNayagan Censor: முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில், 12 திருத்தங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

JanaNayagan Censor: விஜய் நடிப்பில் உருவாகிய ஒரு திரைப்படம் தணிக்கையில் A சான்றிதழ் வாங்குவது இதுவே முதல்முறையாகும். 

ஜனநாயகன் - A சான்றிதழ்

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக முடங்கிக் கிடந்த திரைப்படத்திற்கு, 7 மாத கால கடும் போராட்டத்திற்கு பிறகு தற்போது A சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விஜய் நடிப்பில் உருவாகிய ஒரு திரைப்படம் தணிக்கையில் A சான்றிதழ் வாங்குவது இதுவே முதல்முறையாகும். இதனால் குறிப்பிட்ட வயது வரம்புக்கு உட்பட குழந்தைகள் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுபோக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு,12 மாற்றங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனநாயகன் - 12 திருத்தங்கள் என்ன?

தணிக்கை வாரியத்தின் சான்றிதழின்படி, ஒரு புத்தகத்தின் அட்டையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தோன்றும் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. "அம்பேத்கர் தொடங்கி TVK சட்டம்" என்று குறிப்பிடும் உரையாடல் மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டிலும் "டிவிகே" என்ற வார்த்தையின் பயன்பாடு மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் இந்திய தேசியக் கொடி கீழே விழும் வகையில் உள்ள காட்சியை நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  'பாகவதான்', 'ரங்கநாதர்' ஆகிய வார்த்தைகளுடன், 'தே** பை**' மற்றும் 'ஒ**' ஆகிய வார்த்தைகளும் ம்யூட் செய்யப்பட்டுள்ளன.

ஆபரேஷன் மெலூஹாவை விளக்கும் உரையாடலில் 'ஓம்' என்ற சொல் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் அதை நீக்க வேண்டும் என்பது மற்றொரு மாற்றமாகும். அதே காட்சியில், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைக் குறிப்பிடும் ஒரு உரையாடலும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சின்னம் மரியாதையற்ற முறையில் கீழே உருட்டிவிடப்படுவது போன்ற காட்சியை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், "பொன்னோடா... குடுத்து வச்சிருக்கு, உ*** இருக்குனு" என்று தொடங்கும் முழு வசனமும் ம்யூட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'இந்தியாவை என் காலில் விழ வைக்கிறேன்' என்ற வார்த்தைகளைக் கொண்ட மற்றொரு வசனமும் ம்யூட் செய்யப்பட உள்ளது. குழந்தையை எரிக்கும் காட்சி நீக்கப்படுவதோடு, ஒரு காட்சியில் சிலுவையில என்ற வார்த்தையும் ம்யூட் செய்யப்பட வேண்டும். கடைசியாக திரைப்படத்தில் ஷீலா ராணி என்ற பெயர் இடம்பெறும் இடங்களில் எல்லாம் அதை மாற்றுமாறு தயாரிப்பாளர்களுக்கு தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்

ஜனநாயகன் - மொத்த மாற்றம் என்ன?

மொத்தத்தில், 20 வினாடிகள் நீக்கத்திற்கும், 10 வினாடிகளை மாற்றி அமைக்கவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டபோதிலும், திரைப்படத்தின் நீளம் 183 நிமிடங்கள் 11 வினாடிகள் என்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜன நாயகன் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். அதன் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். எச். வினோத் இயக்கி, கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு ஆகியோரும் நடித்துள்ளனர். இதனிடையே, படம் வரும் ஜுலை 24ம் தேதி வெளியாகும் என, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget