Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
Nissan Tekton Midsize SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள, நிசான் டெக்டானில் உள்ள அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Nissan Tekton Midsize SUV: நிசான் டெக்டானின் தொடக்க விலை ரூ.10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.
நிசான் டெக்டான் - 5 ஸ்டார் ரேட்டிங்
பாரத் புதிய கார் மதிப்பீட்டு சோதனையில் நிசானின் மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, முழுமையான 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான சான்றிதழானது அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். டெக்டான் காரானது தனது ப்ளாட்ஃபார்ம், பாடி ஸ்ட்ரக்சர் மற்றும் பயணிகளின் பாதுகாப்புத் தொகுப்பு ஆகியவற்றை ரெனால்ட் டஸ்டருடன் பகிர்ந்துகொள்வதால், BNCAP ஆனது பாதுகாப்பு பரிசோதனயில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான புள்ளிக்ளை பெற்றுள்ளது. டெக்டான் மாடலானது பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 32-க்கு 30.49 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதானையி 49-க்கு 45 புள்ளிகளையும் பெற்று இரண்டு பிரிவிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை உறுதி செய்துள்ளது.
நிசான் டெக்டான் - பாதுகாப்பிற்கான அம்சங்கள்
தீவிரமான மோதலின்போதும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏராளமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. டெக்டானின் ஒவ்வொரு வேரியண்டிலும் 6 ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதுபோக ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன், ப்ரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், ரோலோவர் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஃப்ரண்ட் டிஸ்க் ப்ரேக்குகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதுபோக, ஸ்பீட் சென்சிங் ஆட்டோமேடிக் டோர் லாக், ஃப்ரண்ட் சீட் பெல்ட் ரிமைண்டர், ஆட்டோமேடிக் ஹசார்ட் வார்னிங், பாதசாரிகள் பாதுகாப்பு அம்சங்கள், பக்கவாட்டு தாக்கத்திற்கான பாதுகாப்பு பீம்கள் மற்றும் வலுவான ஸ்டீல் பாடி கட்டமைப்பு ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. கூடுதலாக டாப் எண்ட் வேரியண்ட்களானது லெவல் 2 ADAS வசதியை பெறுகிறது. இதில் ஸ்டாப் மற்றும் கோ அம்சத்துடன் கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ட்ராஃபிக் குறியீடுகளை அடையாளம் கண்டு செயல்படுவது, 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள் மற்றும் பல ட்ரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்களும் அடங்கும்.

நிசான் டெக்டான் - விலை, போட்டியாளர்கள்
உள்ளூர் சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் என பெரும் மிட்-சைஸ் எஸ்யுவிக்களுடன் போட்டியிட உள்ள, நிசான் டெக்டானின் விலை வரம்பானது ரூ.10.49 லட்சத்தில் தொடங்கி ரூ.18.59 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. ப்ராண்டின் ஆன்லைன் முகவரியை அணுகி, விருப்பமுள்ளவர்கள் டெக்டானுக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். இதற்காக சுமார் 21 ஆயிரம் ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். தொடர்ந்து ஜுலை 20ம் தேதி மூலம் இந்த காருக்கான விநியோகம் தொடங்க உள்ளதாம்.
நிசான் டெக்டான் - மைலேஜ் எப்படி?
டெக்டான் இரண்டு டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. T160 டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் எடிஷனானது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கிறது. இது லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆற்றலை வழங்கும் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு T280 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. இது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் லிட்டருக்கு 17.8 கிலோ மீட்டரும், 6 ஸ்பீட் வெட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 18.5 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என நிசான் அறிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























