மேலும் அறிய

TN 10th, 12th Result 2022: திருச்சி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விபரங்கள்..

திருச்சி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட, அதிக மதிப்பெண்கள் எடுத்து மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  12 மற்றும்  10 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியின் 1 பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஒரு உண்டு உறைவிடப்பள்ளியும்  என மொத்தம் 259 மேல்நிலை பள்ளிகள் உள்ளது. இதில்  15 ஆயிரத்து 522 மாணவர்களும், 17 ஆயிரத்து 599 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 121 மாணவர்கள் +2 பொதுத்தேர்வினை எழுதினார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்  மாணவர்கள் 93.31%, மாணவிகள் 98.24% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், +2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு (2019-20) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.  குறிப்பாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், +2 வகுப்பு தேர்வில் 93.38 விழுக்காடுதேர்ச்சி பெற்றுள்ளனர்.


TN 10th, 12th Result 2022: திருச்சி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விபரங்கள்..

மேலும் திருச்சி மாவட்டத்தில் 87 பள்ளிகளில் 100 விழுக்காடு மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 50 மெட்ரிக் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் பள்ளிகள் 15 பள்ளிகளும், அரசு பள்ளிகள் 12,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம்,  ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஒன்றும் அடங்கும்.

12 ஆம் வகுப்பு தேர்வில் 100 மதிப்பெண் விபரம்..

மொழி பாடங்களில் 23 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 2 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 25 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 28 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 50 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 46 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 114 மாணவர்களும், கணிதம் பாடத்தில் 65 மாணவர்களும்,  நுண் உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரும் என 355 மாணவர்கள் அந்தந்த பாடங்களில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


TN 10th, 12th Result 2022: திருச்சி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விபரங்கள்..

 

10 ஆம் வகுப்பு பொதுதேர்வு விபரங்கள்..

திருச்சி மாவட்டத்தில் 5 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் 1 நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 135 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் மூன்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு பள்ளியும் என மொத்தம் 455 உயர்நிலை பள்ளிகள் உள்ளது. 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வை  17 ஆயிரத்து 713 மாணவர்களும், 17 ஆயிரத்து 540 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 253 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 87.64%, மாணவிகள் 96.78% தேர்ச்சி என மொத்தம் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்  அரசு பள்ளிகளில் படித்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 90.05 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

10 வகுப்பு தேர்வில் 100 மதிப்பெண்கள் விபரம்

ஆங்கிலம் - 1 , கணிதம் - 60, அறிவியல் - 107, சமூக அறிவியல் - 12 , மொத்தம் - 180 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மேலும் 2018-19 ஆம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 96.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். (2019-20) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதன்  காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில்  கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையின் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Embed widget