மேலும் அறிய

Online Coaching: டெட் தேர்வில் வெற்றிபெறத் தகுதியான இளைஞர்களுக்கு இணையப் பயிற்சி: ஆக.10 முதல் தொடக்கம்

2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களில்‌ 99% மாணாக்கர்‌ உயர்கல்வி நிறுவனங்களில்‌ சேர்ந்துள்ளனர்‌.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெறத் தகுதியுள்ள பழங்குடியினர்‌ இளைஞர்களுக்கு 10ஆம்‌ தேதி முதல்‌ சேலம்‌, கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல்‌, திருவண்ணாமலை, திருச்சி, கோயம்புத்தூர்‌, கன்னியாகுமரி மற்றும்‌ வேலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ இணைய வழி சிறப்புப்‌ பயிற்சி துவங்கப்பட உள்ளதாக பழங்குடியின நலத்துறை தெரிவித்துள்ளது.

பழங்குடியினர்‌ நலத்துறையில்‌ 212 அரசு பழங்குடியினர்‌ உண்டி உறைவிட ஆரம்பப் பள்ளிகள்‌, 49 நடுநிலைப்பள்ளிகள்‌, 31 உயர்நிலைப் பள்ளிகள்‌ மற்றும்‌ 28 மேல்நிலைப் பள்ளிகள்‌ என மொத்தம்‌ 320 பள்ளிகளில்‌ 24,689 மாணவ/ மாணவிகள்‌ கல்வி பயின்று வருகின்றனர்‌.

2023- 2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ அதிகத் தேர்ச்சி

இப்பள்ளிகளின்‌ மாணாக்கர்களின்‌ கல்வித்‌ தரத்தினை உயர்த்திட சிறப்பு ஆசிரியர்கள்‌ மூலம்‌ மாலை நேர வகுப்புகள்‌, உயர்நுட்ப ஆய்வகங்கள்‌, இணையதள வழியில்‌ கல்வி பயிற்றுவித்தல்‌, பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்‌ போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்‌ விளைவாக 2023- 2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ 10 மற்றும்‌ 12 வகுப்பு பொதுத் தேர்வில்‌ முறையே 92.45% மற்றும்‌ 95.15 % தேர்ச்சி பெற்று பழங்குடியினர்‌ நலப்பள்ளிகள்‌ சாதனை படைத்துள்ளன.

99% மாணாக்கர்‌ உயர் கல்வி சேர்க்கை

2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களில்‌ 99% மாணாக்கர்‌ உயர்கல்வி நிறுவனங்களில்‌ சேர்ந்துள்ளனர்‌.

JEE, CLAT, CUET மற்றும் NIFT தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள்‌ மூலம்‌ 2023-2024 ஆம்‌ ஆண்டு 9 பழங்குடியின மாணாக்கர்களும்‌ 2024-2025 ஆம்‌ ஆண்டு 7 பழங்குடியின மாணாக்கர்களும் தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களான திருச்சி தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்‌ (NIT), திருச்சி தேசிய சட்டப்பல்கலைக்கழகம்‌, சென்னை, தரமணி மற்றும்‌ பெங்களூரு தேசிய உடையலங்கார தொழில்நுட்பக்‌ கல்லூரி (நிஃப்ட்) ஆகியவற்றில்‌ சேர்ந்துள்ளனர்‌.

2024- 2025 கல்வியாண்டில்‌ மேற்கண்ட நிறுவனங்களில்‌ மாணாக்கர்‌ சேர்க்கை உறுதி செய்ய JEE, CLAT, CUET மற்றும்‌ நிஃப்ட் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள்‌

மேற்கண்ட வளர்ச்சியினை தொடர்ந்து உறுதி செய்ய பழங்குடியினர்‌ நலத்துறை பள்ளிகளுக்காக ஒப்பளிக்கப்பட்டுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்‌, பட்டதாரி ஆசிரியர் மற்றும்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள்‌ பணிபுரிந்து வருகின்றனர்‌.

மேலும்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ நடத்தப்படும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில் ‌(டெட்)  வெற்றிபெறத் தகுதியுள்ள பழங்குடியினர்‌ இளைஞர்களுக்கு 10ஆம்‌ தேதி முதல்‌ சேலம்‌, கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல்‌, திருவண்ணாமலை, திருச்சி, கோயம்புத்தூர்‌, கன்னியாகுமரி மற்றும்‌ வேலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ இணைய வழி சிறப்புப்‌ பயிற்சி துவங்கப்பட உள்ளது என்று பழங்குடியின நலத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget