மேலும் அறிய

TRB Recruitment: தமிழில் படித்தவர்களுக்கு அநீதி; ஆசிரியர் தேர்வு வாரியமே துரோகம் செய்யலாமா?- ராமதாஸ் கேள்வி

முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழில் படித்தவர்களுக்கு அநீதி இழைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழில் படித்தவர்களுக்கு அநீதி இழைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்துப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமும், பள்ளிக்கல்வித் துறையும் செய்த தவறுகள்தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் எனும் நிலையில், அதற்காக  தவறு இழைக்காத தமிழ்வழி பட்டதாரிகளை தண்டிப்பது கண்டிக்கத்தக்கது; அதை ஏற்க முடியாது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு 3209 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 13ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட இடைக்காலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நானூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருந்தனர். அக்டோபர் மாதம் 12, 13 மற்றும் 14ஆம் நாட்களில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவர்கள் அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கு அநீதி

ஆனால், தமிழ் வழியில் பயின்ற ஏராளமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை. அதன் வாயிலாக தமிழ்வழியில் பயின்றோருக்கு எந்த காரணமும் இல்லாமல் ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்திருக்கும் விளக்கம் எவ்வகையிலும் ஏற்க முடியாதது. வினாக்களுக்கான விடைகளில் காணப்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு இணையான பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஆணையிட்டிருந்தது. அதைக் காரணம் காட்டி, 56 பணியிடங்களை மட்டும் நிரப்பாமல் விட்ட தேர்வு வாரியம், மீதமுள்ள பணிகளை நிரப்பி விட்டது. அதில், தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிக்கு எதிரான இந்த அணுகுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்கள் தரப்பில் உள்ள நியாயங்களை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு பணி வழங்க முடியுமா? என்று வினவினர். ஆனால், அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என்று மறுத்து விட்டது. எனினும், அதை ஏற்காத உயர்நீதிமன்றம், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழ்வழியில் படித்தவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு தகுதி  இருந்தால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என 27.10.2022 அன்று ஆணையிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 4 வாரங்களில் தமிழ்வழியில் பயின்றோருக்கு  ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதன்பின்னர் 6 மாதங்களாகியும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இது தமிழுக்கு இழைக்கப்படும் இரண்டகம் (துரோகம்) ஆகும்.

20% இட ஒதுக்கீடு இல்லாதது ஏன்?

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் 20% வழங்கப்பட்டது. ஆனால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்  பணியமர்த்தலில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே சமூகநீதிக்கு எதிராக  செயல்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, பொதுப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கணக்குக் காட்டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. அதுகுறித்த வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடந்தபோது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிபதிகளின் கடுமையான கட்டணங்களுக்கு ஆளானது. ஆனால், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம், இப்போது மீண்டும் அதே சமூகநீதிப் படுகொலையை செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப் படுகிறது என்றால், அதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட்டு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆணையிட வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
Embed widget