மேலும் அறிய

SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?

SP Velumani : அதிமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கட்சி தாவி வரும் நிலையில், இதில் கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணியும் தேசிய கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவு- அரசியலில் திடீர் திருப்பம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் திராவிட கட்சிகளான திமுக- அதிமுக அதிர்ச்சிக்குள்ளானது. இதில் உட்கட்சி மோதலால் அதிமுகவின் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள். 

தவெகவிற்கு பல்டி அடிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்

அந்த வகையில் தற்போது வரை விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்ததாக யார் தவெகவில் இணைவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக  15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக உள்ளனர். இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கேசி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன் என முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பொறுப்புகளை நிராகரித்துள்ளனர். 

இபிஎஸ் மீது அதிருப்தி

ஏற்கனவே வகித்து வந்த பதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் புறக்கணித்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் அதிருப்தி அணியின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்கிய பிறகு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

மாற்றுக்கட்சியை நோக்கி நகரும் அதிமுக நிர்வாகிகள்

இதனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியே தானாகவே விலகினால் மட்டுமே புதிய பொதுச்செயலாளர் நியமிக்க முடியும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் மாற்றுக்கட்சியை நோக்கி அதிருப்தி நிர்வாகிகளின் பார்வை திரும்பியுள்ளது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

அந்த வகையில் தவெகவில் எஸ்.பி.வேலுமணியை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் கோவை மண்டலம் மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தையும் பொறுப்பாக ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பாஜகவில் இணைய திட்டமிடும் எஸ்.பி.வேலுமணி.?

ஆனால் இதனை எஸ்.பி.வேலுமணி நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே எஸ்.பி.வேலுமணி தேசிய கட்சியான பாஜக மீது பார்வை திரும்பியுள்ளதாகவும், இதற்காக பாஜகவின் டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம்  பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வீ தி லீடர் அமைப்பில் இணையலாமா.? என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget