TNTET 2022: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.. முழு விவரம்..
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (மார்ச் 14) முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (மார்ச் 14) முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 14ஆம் தேதி) முதல் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் விண்ணப்பப் பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம்
தேர்வர்களுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வயது வரம்பு
தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற இணைப்பைச் சொடுக்கி, தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் வாசிக்க: கொடைக்கனலில் காட்டு தீ - 500 ஏக்கரில் பரப்பளவில் அரியவகை மரங்கள் தீயில் கருகி சேதம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்