TNPSC Group 4: முக்கிய அறிவிப்பு; குரூப் 4 தேர்வர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை அள்ளித்தரும் டிஎன்பிஎஸ்சி!
சான்றிதழ் எண்ணை தவறாக பதிவு செய்த தேர்வர்கள், கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்குண சான்றிதழைச் சமர்ப்பிக்கும்போது கடிதம் ஏதும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? விண்ணப்பிக்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன? சுய உறுதிமொழி உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்- 4/ பணிகள்) சான்றிதழ் சரிபார்ப்பு
இணையவழி விண்ணப்பத்தின்போது சான்றிதழ் எண்ணை தவறாக பதிவு செய்த தேர்வர்கள், கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்குண சான்றிதழைச் சமர்ப்பிக்கும்போது கடிதம் ஏதும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா ?
இணையவழி விண்ணப்பத்தின்போது சான்றிதழ் எண்ணை தவறாக பதிவு செய்த தேர்வர்கள், கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்குண்டான சான்றிதழை சமர்ப்பிக்கும்போது கடிதம் ஏதும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம், கண் பார்வை தகுதிச் சான்றிதழ் (Eye Fitness Certificate), வாகன தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு தொடர்பான சுய உறுதிமொழி ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
இணையவழி விண்ணப்பத்தில் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான தகுதிகளான ஓட்டுநர் உரிமம், இலகு ரக வாகனங்கள் அல்லது கனரக வாகனங்கள் இயக்குவதில் மூன்றாண்டிற்கு குறைவில்லாத காலம் பணி முடித்ததிற்கான அனுபவச் சான்றிதழ், மற்றும் முதலுதவிச் சான்றிதழ் பெற்றிருப்பதாக உரிமை கோரிய தேர்வர்கள் மட்டும் ஓட்டுநர் உரிமம், கண் பார்வை தகுதிச் சான்றிதழ், வாகன தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு தொடர்பான சுய உறுதிமொழி ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு
இணையவழி விண்ணப்பத்தின் போது தற்காலிக தட்டச்சு சான்றிதழ் மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிக தட்டச்சு சான்றிதழ் மற்றும் இறுதியாக பெறப்பட்ட தட்டச்சு சான்றிதழ் ஆகிய இரண்டையும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வர்கள் தற்காலிக தட்டச்சு சான்றிதழ் அல்லது இறுதியாக பெறப்பட்ட தட்டச்சு சான்றிதழ், ஆகிய ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/