மேலும் அறிய

TNPSC Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு: எங்கெல்லாம் தேர்வு மையம்; என்னென்ன கட்டுப்பாடுகள்?- முழு விவரம்

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு எங்கெல்லாம் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்வெழுத என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு எங்கெல்லாம் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்வெழுத என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தேர்வு நடைபெறும் விதம்குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காகத் தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும். 

என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள்?

தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட உள்ளன. 6,400 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண் தேர்வர்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண் தேர்வர்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 89 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். 

79 ஆயிரத்து 942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பம் செய்துள்ளனர். 

எங்கெல்லாம் தேர்வு மையம்?

சென்னையில் அதிகபட்சமாக 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல மதுரையில் 64 ஆயிரத்து 82 பேரும், சேலத்தில் 63 ஆயிரத்து 437 பேரும் திருச்சியில் 50 ஆயிரத்து 19 பேரும் கோவையில் 48 ஆயிரத்து 39 பேரும் தேர்வு எழுதுகின்றனர். நாகப்பட்டினத்தில் 8 ஆயிரத்து 598 பேரும் மயிலாடுதுறையில் 11 ஆயிரத்து 561 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

முதல்நிலைத் தேர்வை 3 முறை இலவசமாக எழுதலாம். இந்தப் பிரிவின் கீழ், 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் இலவசமாகத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முழுவதும் கொள்குறித் தேர்வு வகையில் நடைபெற உள்ளது’’.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget