TNPSC: டிஎன்பிஎஸ்சி அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது?
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) உள்ளிட்ட 14 பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு பதவிகள்) அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) -II, 2025 தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்), முதுநிலை அலுவலர் (நிதி), கணக்கு அலுவலர், உதவி மேலாளர் கணக்கு, மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-II -க்கான அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 76 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வர்கள் 20.01.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஜனவரி 24 முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
கல்வித் தகுதி
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) - வேளாண்மை விரிவாக்கம் அல்லது வேளாண்மை பொருளாதாரம் முதுநிலை பட்டப்படிப்பு
மற்றவை சமமாக இருக்கும்பட்சத்தில் வேளாண்மை விரிவாக்கத்தில் முதுநிலை பட்டப்படிப்பு பெற்றிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
உதவி மேலாளர் (கணக்கு) - இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் / இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தால் நடத்தப்படும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கணக்கு அலுவலர் நிலை – III - பட்டய கணக்காளர்கள் / செலவு கணக்காளர்கள் நிறுவனத்தால் நடத்தப்படும் இறுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலாளர் -நிலை III (நிதி) - பட்டய கணக்காளர் / செலவு கணக்காளர்
முதுநிலை அலுவலர் (நிதி) - பட்டய கணக்காளர் / செலவு கணக்காளர்
முதுநிலை அலுவலர் (சட்டம்) -பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியிலிருந்து பெறப்பட்ட இளநிலை சட்டப்படிப்பு.
இதில் மேலும் சில பதவிகளுக்கு அனுபவமும் தேவைப்படுகிறது.
தேர்வு எப்போது?
இதற்கான கணினி வழித் தேர்வு 07.03.2026 மற்றும் 08.03.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
தேர்வு முறை

விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதுதொடர்பாக அறிவிக்கையைக் காண https://tnpsc.gov.in/document/tamil/CTS-II%20Tamil1_2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.






















