மேலும் அறிய

TNCMTSE 2024: மாதம் ரூ.1000 உதவித்தொகை; வெளியான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

TNCMTSE Results: 500 மாணவர்கள்‌ + 500 மாணவியர்கள்‌ தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை படிப்பு வரை மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்‌. 

அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று (அக்.6) வெளியிடப்பட்டு உள்ளன. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு தமிழ்நாடு மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயின்று தற்போது 2024- 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ பதினொன்றாம்‌ வகுப்பினை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:

அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களின்‌ திறனைக்‌ கண்டறிவதற்கும்‌, அவர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌ தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்தேர்வு, 04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,03,756 மாணவ மாணவியர்கள்‌ இந்தத் தேர்வை எழுதினர்‌.

ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை

இத்தேர்வில்‌ 1000 மாணாக்கர்கள்‌ (500 மாணவர்கள்‌ + 500 மாணவியர்கள்‌) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்‌ உதவித் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்‌. இத்தேர்வின்‌ முடிவுகள்‌ 06.11.2024 அன்று (இன்று) வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

* முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வை எழுதிய மாணவர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதில் ‌ RESULTS என்ற தலைப்பில்‌ என்று TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

* அதில் மாணவர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

அல்லது https://apply1.tndge.org/nts-result-change-2022 என்ற இணைப்பையே நேரடியாக க்ளிக் செய்யலாம். 

* அவ்வாறு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்‌.

ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்டியலை‌க் காண்பது எப்படி?

அதேபோல ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்டியலை‌க் காண இந்த இணையதளத்திலே other Examination > TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1730869389.pdf என்ற இணைப்பில் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளின் பட்டியலும் https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1730869357.pdf என்ற இணைப்பில் தேர்வான மாணவர்களின் பட்டியலும் இடம்பெற்று உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு குறித்த அனைத்து அறிவிக்கைகளையும் காண https://apply1.tndge.org/dge-notification/TCMTSE என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget