மேலும் அறிய

தமிழக அரசே… மாநில கல்விக் கொள்கை குப்பையில் வீசவா? தேசிய கொள்கைக்கு ஆதரவா? எழும் கேள்வி

திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை.- ராமதாஸ்

குப்பையில் வீசவா மாநிலக் கல்விக் கொள்கை என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில்,  3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

மாநிலக் கல்விக் கொள்கை

மத்திய அரசு உருவாக்கி 2020-ஆம் ஆண்டில் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அது மாணவர்களின் இடை நிற்றலுக்கு வழி வகுக்கும் என்பதால் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழகத்தின் சூழலுக்கு பொருந்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று 2022-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது; அதே ஆண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

நீதியரசர் முருகேசன் குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் உடனடியாக அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து  மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் புரியவில்லை.

குப்பையில்தான் போட்டாக வேண்டும்

மாநிலக் கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அதன் மீது தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை; அதை குப்பையில்தான் போட்டாக வேண்டும். இதற்காகவா மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாயை செலவு செய்து மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு தயாரித்தது?

மறைமுகமாக ஆதரவா?

மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடாமல் இருக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும் மாநிலக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கும். இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது இந்த ஐயம் உறுதியாகிறது.

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதுதான் திமுக அரசின் நிலைப்பாடு என்றால்,  ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன்? மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு உடனடியாக விடையளிக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
அரசுப் பள்ளிகளில் 18ஆயிரம்+ காலி இடங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசமா?
அரசுப் பள்ளிகளில் 18ஆயிரம்+ காலி இடங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசமா?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
Redmi Turbo 5 Review: எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
Embed widget